உள்ளூர்
ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள தயார்- சஜித் பிரேமதாச
ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை பார்வையிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை றாகம வைத்தியசாலைக்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே எதிர்கட்சித் தலைவர்…
நாளொன்றுக்கு 300 – 400 டெங்கு நோயாளர்கள் பதிவுஇதுவரைளில் 23 மரணங்கள் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை
நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 300 – 400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…
300 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்
இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவருக்கு 2500 ரூபாய் வழங்கப்படவுள்ளது. கொவிட் தொற்று காரணமாக இந்த ஆண்டு 2021 – 2022 என இரு தொகுதி மாணவர்களுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இதன் போது…
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய படைவீரர் தின நிகழ்வு
தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் நேற்று (19) நடைபெற்றது. யுத்தத்தில் இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுக்காப்பு படைகளை சேர்ந்த 28,619 படையினர் உயிர் நீத்தனர். 27,000 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் இராணுவ சேவை அதிகாரசபையினால் 2023 படைவீரர் நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய…
பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணி துரிதப்படுத்தப்படும்: ஜனாதிபதி
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணி துரிதப்படுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் பரிந்துரைகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திருமலையில் சீன ஆளுநர்
திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சீன நாட்டின் யுனான் மாகாண ஆளுநர் “சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார். இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், வித்தியாலய அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து 2 கிலோ தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிப்பு
துபாயிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 2 கிலோ கிராம் தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மூன்று பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்கத்தை கைப்பற்றியதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விமான நிலைய சுங்கப் பிரிவினர் அத்தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், 12 இலட்சம் ரூபா அபராதம் விதித்து குறித்த நபரை விடுவித்ததாக…
ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை
வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்தத் தீர்ப்பை வழங்கினார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பராமரிக்க முடியாது என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்….
06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்க கோரிக்கை
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம் இருந்து 06 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வன அரன அறக்கட்டளை உள்ளிட்ட 04 தரப்பினர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர். தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல்…

