உள்ளூர்
யாழ். பல்கலை பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதியுங்கள் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களை பதிவுசெய்வதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பும் அதிகாரம் பீடாதிபதிகளுக்கு இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, அந்தந்த பல்கலைக்கழகங்களின்…
இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் புலம்பெயர்ந்த தழிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும் புலம்பெயர் தழிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கு தேவையான ஒழுங்குகளை செய்யுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ;ட உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன் போது ஜனாதிபதியிடம் கருத்துரைத்த ஐ.தே.க.வின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார, புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க…
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வு பிரிவு- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த…
மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து
திக்வெல்ல கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளார். இந்த விபத்து நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், படகு கவிழ்ந்த போது அவருடன் இருந்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரட்டுவ – பதீகம பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீரில் மூழ்கி பாடசாலை மாணவி பலி!
முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்றவர்கள் மத்தியில் பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (21) குறித்த குழுவினர் நீராடச் சென்றுள்ள நிலையில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள உடப்புவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி நான்கு நண்பிகள் மற்றும் ஒரு நண்பியின் பாட்டியுடன் புச்சகுளம வாவியில்…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய ஏற்பாட்டாளர்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷான் சந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளர். மதுஷான் சந்திரஜித் பேராதனை பல்கலைக்கழக இணைந்த சுகாதார பீடத்தை சேர்ந்தவர் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக வசந்த முதலிகே செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார். மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள்களை பரீட்சை திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். பொது ஆங்கிலம் பாடம் தொடர்பான விடைத்தாள்களை மதிப்பிடும் பணி வரும் 26ம் திகதி முதல்…
திரிபோஷாவுக்கு வரிச் சலுகை
திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரியை 25 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த வரிச் சலுகை மே மாதம் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிச்சம்பழம் இறக்குமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையை…
பின் கதவு ஊடாக வழங்கப்படும் அரசியல் நியமனங்கள்சட்டத்துக்கு முரணானவை – லக்ஷ்மன் கிரியெல்ல
கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு நியமித்து அவர்களுக்கான சிறப்புரிமைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பின் கதவின் ஊடாக வழங்கப்படும் இவ்வாறான அரசியல் நியமனங்கள் சட்டத்துக்கு முரணானவையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , தற்போது உள்ளுராட்சிமன்றங்களின் பதவி காலம் நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ளன. எனவே…
இலங்கை – இந்திய கூட்டுத்திட்டங்கள் குறித்து மீளாய்வு கூட்டம்
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி , சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முன்னெடுப்பது தொடர்பான மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் , கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களில் மீள்புதுப்பிக்கத்தக்க உட்கட்டமைப்பு மற்றும் விநியோகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும்…

