உள்ளூர்
சற்றுமுன் வௌியான விசேட வர்த்தமானி
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாவும், வசூலிக்கப்படுகிறது. முன்பு பெரியவர்களுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 20 ரூபாவும் கட்டணம் விதிக்கப்பட்டது. தாவரவியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 1,500…
ஜனாதிபதி ரணில் சிங்கப்பூர் , ஜப்பான் விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் (Fumio Kishida) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும்…
பாடசாலை மாணவியை கடத்திய 5 பேர் கைது
சிலாபம் பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 21 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹலவத்த தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (22) சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இனவாதம், மதவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன – அனுரகுமார
மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம்,மதவாத கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் குறிப்பிட்ட கருத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி…
தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வழக்கொன்று நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை
03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்….
வலி நிவாரணிகளை திருடிய இருவர் கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சட்ட வைத்தியர் ஒருவரின் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்தில் 1,500 க்கும் அதிகமான வலி நிவாரணிகளை திருடிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரத்தைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம், மாத்தளை சந்திக்கு அருகில் அமைந்துள்ள வைத்திய நிலையத்தின் முன் கதவை உடைத்து உட்புகுந்த இருவர் குறித்த மருந்துகளை திருடிச் சென்றுள்ளதாக…
இலங்கைக்கு சினோபெக் வருவது உறுதியானது
உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd மற்றும் சீனா மற்றும் சிங்கப்பூரில் அமைந்துள்ள அதன் தாய் நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் சுமந்திரன் கலந்துரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (22) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது சுமந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஆளுநருடன் உரையாடினார்.
போலிகடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன பயணி
சீன பிரஜையொருவர் போலிகடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயற்சித்த சம்பவம் தொடர்பில் குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களிற்கான அமைச்சர் டிரான் அலெஸ் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சீன பிரஜையை இன்று அமைச்சிற்கு அழைத்து விசாரணை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சீன தூதரகத்தின் ஆலோசனையின் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். போலி கடவுச்சீட்டுடன் பயணித்தவர் கைதுசெய்யப்பட்டவேளை தலையிட்டு விடுதலை செய்த அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கப்போவதில்லை என…

