உள்ளூர்
சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியை இன்று
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று (28) பிற்பகல் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன. இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள தற்காலிக மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 01.00 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இறுதிச் சடங்குகளின் பின்னர், உடல் ஊர்வலமாக…
கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின
வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் பரீட்சை முடிவுகளின்படி 2002 கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு, அவர்கள் அரச சேவைக்குள்…
கோர விபத்தில் மூவர் பலி
குருநாகல் – கிரிஉல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்தனர். லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளையராஜாவின் மகள் பவதாரணியின் பூதவுடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது : சகோதரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை வந்த யுவன்
மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் நேற்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தமிழ் திரைப் பிரபலங்கள் நேற்று இலங்கை வந்தனர் நேற்று பகல் பவதாரணியின் உடல் கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில்…
அல்கைதாவுக்கு உதவிய இலங்கையர் நால்வருக்கு சிவப்பு பிடியாணை!
அல்கைதா அமைப்புக்கு உதவியதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க இன்று (26) ஆங்கிலத்தில் சிவப்பு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிவப்புப் பிடியாணையை பிறப்பித்துள்ளனர். கள்எலிய கலகெடிஹேன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களான தற்போது அவுஸ்திரேலியா மற்றும் சிரியாவில் வசிக்கும் நால்வருக்கே இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு விளக்கமறியல்!
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெலிசர நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் பலியான சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் அவரது இல்லத்தில்
விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் சற்று முன்னர் புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொரளை ஜயரத்ன மல்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியின் இருமருங்கிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டுள்ளதாகவும், இல்லத்திலும் பெருமளவான மக்கள் திரண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் மற்றும் பலர் நேற்று (25) இரவு பொரளை ஜயரத்ன மல்சாலைக்கு…
அரசியல் கைதிகளை சிறையில் சந்தித்த சாணக்கியன் !
இன்று (26) கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டார். அதன் போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வைத்துள்ள கைதிகளை நேரடியாக சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் இவரை தாக்கியிருந்தார். அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சென்றிருந்தேன். முக்கியமாக…
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டது!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் திடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சி கலந்த சோத்தை ஏற்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமான இந்த இழப்பின் காரணமாக ஜனவரி 27ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவிருந்த இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த இளையராஜா…
சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம்!
தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கடந்த 21 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார்…

