உள்ளூர்
படையினருடன் புலிகளை ஒன்றிணைப்பது கோழைத்தனமானது : – சரத் வீரசேகர
நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது. அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) வர்த்தமானி கட்டளைகள் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூறும் வகையில் ‘நினைவு…
கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி
கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. இன்னுமொரு மாநகரசபையிடம் இதேபோன்ற ஒரு…
தையிட்டி விகாரையை அகற்ற கோரிய போராட்டத்தில் ஈடுபட்ட 09 பேர் கைது
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையை அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அதன் போது அங்கு வந்திருந்த பலாலி…
கேள்விக்குறியாகியுள்ள பெண் யாசகர்களின் பாதுகாப்பு!
‘செத்து போன என் பிள்ள திரும்ப வருமா? எனக்கே பாதுகாப்பு இல்லம்மா. எனக்கு அப்புறம் என் பேரப்புள்ளைங்க என்ன செய்யும்?‘ ஆண் பிள்ளைகள் மூவர் இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட 78 வயதான மீனாட்சியின் மனக்குமுறலிது. மாத்தளை – உக்குவெல தோட்டத்தை சொந்தமாகக் கொண்ட மீனாட்சி கடந்த சில மாதங்களாக ஹட்டன் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் யாசகம் பெற்று வருகின்றார். தனிமையில் அமர்ந்திருக்கும் போது தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் மீனாட்சி அவரைக் கடந்து செல்பவர்களிடம் ஐயா , அம்மாவெனக் கூறி கைகளை ஏந்தும் அந்த நொடி மனதுக்குள் ஒரு ரணத்தை ஏற்படுத்தியது. ஏந்திய கைகள் வெறுமையாகவே கீழிறங்கிய போது அந்தக் கரங்களை நான் பற்றி , அவரிடம் உரையாடத் தொடங்கினேன். ‘எனது சொந்த இடம் மாத்தளை – உக்குவெல கிராமம். எனக்கு 3 ஆண் பிள்ளைகள் இருந்தும் மூவருமே என்னை கைவிட்டு விட்டனர். எனது பெண் பிள்ளை வட்டவளையில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார். திடீரென ஏற்பட்ட சுகயீனத்தால் அவர் உயிரிழந்தார். அவரது 3 பிள்ளைகளையும் தற்போது நானே பராமரித்து வருகின்றேன். எனக்கு பார்வை தெளிவில்லை என்பதால் தொழில் எதையும் செய்ய முடியாது. அதனாலேயே யாசகம் பெற்று அந்த 3 பிள்ளைகளையும் பராமரித்து வருகின்றேன். எனது மகளின் இறப்புக்கு பின் மருமகன் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவரை தேடி திரியும் திறன் என்னுடம்பில் இல்லை. நான் இருக்கும் வரை யாசகம் பெற்றேனும் எனது பேரப்பிள்ளைகளை பார்த்துக் கொள்வேன். எனக்கு பின்னர் அவர்களுக்கு பாதுகாவலர்கள் எவரும் இல்லை. எனக்கு உதவ வேண்டுமென நினைப்பவர்கள் எனது இறப்பின் பின் அந்த பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதே எனது தேவையாகவுள்ளது.’ என்று அவர் தன் வேதனையை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஆசிய நாடுகள் இன்று அபிவிருத்தியில் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கின்றன. தமக்கென ஒரு காலத்தை வரையறைத்து இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பயணித்து வருகின்றன.2048ஆம் ஆண்டுக்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதையே தற்போதைய அரசாங்கம் அதன் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக வறுமையிலுள்ள மக்களின் பொருளாதார மட்டத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிதி நிவாரணங்களையும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வறுமை நிலையிலுள்ள மக்களுக்காகவே இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதே தவிர , வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்காக அல்ல. இவர்கள் குறித்து சிந்திக்காமையின் காரணமாகவே இலங்கையில் இன்றும் யாசகர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களில் பெருமளவானோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோராகவே உள்ளனர். இவர்கள் தவிர கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த அல்லது எந்தவொரு உறவும் அற்ற பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானளவு காணப்படுகிறது. இவ்வாறானவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வீதியோரங்களில் யாசகம் பெறுவதையும் , இரவில் வீதியிலேயே உறங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இன்று வீடுகளிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பு கூட கேள்விக்குறியாகியுள்ள நிலையில் , இவ்வாறு வீதிகளில் உறங்கும் பெண்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்விகள் எழுகின்றன. அதே வேளை முதியோரின் பராமரிப்பும் இவ்வாறு கேள்விக்கு றியாகவே காணப்படுகிறது. நாட்டில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யாசகர்கள் கைது செய்யப்படுவதுண்டு. எனவே யாசகர்களுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ அதிகாரம் பொலிஸாருக்கு காணப்படுகிறது. இது குறித்து கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் உயர் அதிகாரியொருவரை சந்தித்து வினவிய போது அவர் இவ்வாறு கூறுகின்றார். ‘யாசகர்கள் தொடர்பான கட்டளை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவர். எனினும் கைது செய்து பின்னர் அவர்களை ஒப்படைப்பதற்கென எந்தவொரு இடமும் இல்லை. கைது செய்யப்படும் யாசகர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவர்களை ஒப்படைப்பதற்கான இடத்தை தேட வேண்டியுள்ளது. கைது செய்யப்படுபவர்கள் தமது உண்மையான விபரங்களை பொலிஸாரிடம் தெரிவிப்பதில்லை. மாறாக வறுமைக்காகவும் , வாழ்வாதாரத்துக்காகவுமே யாகசம் பெறுவதாகக் குறிப்பிடுகின்றனர். எனவே அவர்களை உறவினர்களிடமோ அல்லது பாதுகாவல்களிடமோ ஒப்படைப்பதற்கான வாய்ப்புக்களும் இல்லை. இதனால் யாசகர்களை கைது செய்ய முடியாத நிலைமையும் தற்போது காணப்படுகிறது. தற்போது தத்தமது பிள்ளைகளை கைகளில் வைத்துக் கொண்டும் யாசகம் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறானவர்கள் குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் வழங்க முடியும். அதே போன்று பாதுகாப்பற்ற நிலையிலுள்ள பெண் யாசகர்கள் அல்லது சிறுவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தால் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்க முடியும். அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தருமிடத்து பொலிஸாரினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரிதியகம பிரதேசத்தில் யாசகர்களை பராமரிக்கும் நிலையமொன்று காணப்பட்டது. எனினும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே அதில் இடப்பிரச்சினை , பராமரிப்பு பிரச்சினைகள் காணப்பட்டன. தற்போதும் அந்த சிக்கல்கள் காணப்படுகின்றமையால் அந்நிலையமும் செயலிழந்தே காணப்படுகிறது. எனவே யாசகர் குறிப்பாக பெண் யாசகர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்திரமான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை.’ எவரேனுமொருவரிடமிருந்து ஏதேனுமொரு உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் யாசகர்களுக்கு இந்த சமூகத்தில் தீர்வினை முன்வைக்க எவரும் முன்வருவதாகத் தோன்றவில்லை. அதனால் தான் தொழில் புரியுமிடத்தில் தகரம் வெட்டி கைகளில் நரம்புகள் பாதிக்கப்பட்ட 80 வயதான மட்டக்களப்பு செங்கலடி வேப்பவட்டுவான் பகுதியைச் சேர்ந்த இராமையா விஜயவதி அன்றாட உணவுக்காக யாசகம் பெறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 1990 ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக எனது கணவர் மற்றும் மகன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துவிட்டனர். வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல சமையல் முதல் கிடைத்த எல்லா தொழிலையம் செய்து வந்தேன். எனது மகள் கொழும்பில் வீட்டு வேலைக்காக சென்றுவிட்டார். அவருக்கு நான்கு பிள்ளைகள் . கணவன் அவரை விட்டு பிரிந்துவிட்டார். இதனால் நான் தனிமையாக்கப்பட்டுள்ளேன். தொழில் புரிந்த இடத்தில் தகரத்தைக் கொண்டு வேலி அமைத்துக் கொண்டிருந்த போது , எனது கையில் தகரம் வெட்டியதால் மூன்று மாதங்களுக்கு மேல் கைகள் செயலிழந்து காணப்பட்டன. நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள். இதனால் தொழிலுக்கு செல்ல முடியாது போனது. அதனால் தான் அன்றாட உணவுக்காக யாசகம் பெற்றுக் கொண்டிருக்கின்றேன். வாரத்தில் மூன்று நாட்கள் யாசகம் பெறச் செல்வேன். நாள் ஒன்றுக்கு 1500 ரூபா முதல் 2000 வரை கிடைக்கும். அந்த பணத்தில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறேன். அரசாங்கத்தினால் மாதாந்தம் 250 ரூபா முதியோர் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. தற்போது பொருட்களின் விலையேற்றம் காரணமாக கிடைக்கும் பணம் போதாமல் உள்ளது. திருப்தியாக உணவு உண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். ‘ என்கிறார் விஜயவதி. பராமரிப்பதற்கு இடமில்லை என்பதற்காகவோ , முறையான வேலைத்திட்டங்கள் இல்லை என்பதற்காகவோ இவர்களை அவ்வாறே கைவிட்டுவிட முடியாதல்லவா? யாசகர்களானாலும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் , Search for Common Ground அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளருமான நளினி ரட்ணராஜா தெரிவிக்கையில் , ‘அரசியல் யாப்பில் யாசகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை சட்டங்கள் எவையும் இல்லை. அனைவரும் பொருளாதார, சமுக, குடியியல் உரமையுடன் வாழ வேண்டும் என்றும் , அனைவரும் சமன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் யாசகர்கள் ஏன் உருவாகின்றனர் என்பது குறித்து சிந்திக்க வேண்டுமல்லவா? எனவே யாசகர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து சிந்திக்க முன்னர் என்ன பிரச்சினை என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் வறுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள் வறுமைக்குள்ளாகும் வீதம் சடுதியாக அதிகரித்துள்ளது. பெண்களின் முறைசாரா தொழில்கள் அங்கீகரிக்கப்படாமை இதற்கான பிரதான காரணியாகும். அதாவது அரச மற்றும் தனியார் துறைகளில் 70 சதவீதமானோர் ஆண்களாகவே காணப்படுகின்றனர். பெண்கள் 30 சதவீதம் மாத்திரமே காணப்படுகின்றனர். இவை தவிர எந்தவொரு துறைக்குள் சென்றாலும் அங்கு அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் காணப்படுகின்றன. எனவே பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். தேயிலை தொழிற்துறை, ஆடை தொழிற்சாலைகள் , வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கிற்குச் செல்லல் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறைகளில் பெண்களின் பங்களிப்பே அதிகமாகவுள்ளது. எவ்வாறிருப்பினும் அவற்றுக்கான முறையான அங்கீகாரம் வழங்கப்படாமையின் காரணமாகவே அதிகளவில் பெண்களை வீதிகளில் காணக் கூடியதாகவுள்ளது. எனவே இவர்கள் வீதிக்கு வருவதற்கான காரணம் என்னவென அறிந்து , அவர்களுக்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். 2030இல் இலங்கையை வறுமையற்ற நாடாக மாற்றும் இலக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் இவ்வாறான பெண்களுக்கு சுயதொழிலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எந்த கருத்துக்களையும் முன்வைப்பதில்லை. குழந்தைகளுடன் வீதிகளில் யாசகம் பெறும் பெண்களையும் அவதானித்திருக்கின்றோம். இதன் பின்னணியில் சில வியாபாராங்களும் உள்ளன. எனவே அரசாங்கம் இவை தொடர்பில் ஆராய்ந்து உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் பெண்களை யாசகம் பெறச் செய்பவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவர்களது பாதுகாப்புக்கான சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவருக்கும் கௌரவத்துடன் வாழவேண்டிய உரிமை காணப்படுகிறது. அந்த உரிமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதேயளவு 50 சதவீத பொறுப்பு நாட்டு மக்களுக்கும் காணப்படுகிறது. யாசகம் பெறுபவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும். எனவே அரசாங்கத்தின் மீது மாத்திரம் நூறு வீதம் குற்றஞ்சுமத்தி எம்மால் தப்ப முடியாது. அனைவரது ஒத்துழைப்பாலும் யாசகர்கள் இல்லாத இலங்கை உருவாக வேண்டும். இவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால் மாத்திரமே அது இலங்கை அபிவிருத்தியடைந்த நாடு என்பதற்கான அடையாளமாகும். யாகசம் பெறுபவர்கள் இருக்கும் வரை இலங்கை அபிவிருத்தியடையவில்லை என்பதையே காட்டுகிறது. பெருந்தெருக்களை அமைப்பதும் , குளிரூட்டப்பட்ட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவது மாத்திரம் அபிவிருத்தியின் அடையாளம் இல்லை. மக்கள் அனைவரும் தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு கௌரவமாக வாழும் சூழல் ஏற்பட்டால் மாத்திரமே அது அபிவிருத்தியடைந்த நாடாகும்’ என்றார். கொழும்பு – ஜம்பட்டா வீதியில் பிறந்து தற்போது கொலன்னாவையில் வசிக்கும் 65 வயதான பாதிமா மேரி , இளம் வயதிலேயே கணவனை இழந்தவராவார். பெண் பிள்ளையொருவருக்கும் , இரு ஆண் பிள்ளைகளுக்கும் தாயான இவர் இன்று…
COP 28 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு
ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு…
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிடம் நட்டஈடு கோரியுள்ள இந்தியா
இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டைமண்ட் கப்பலும் விபத்துக்கு உள்ளாகிய போது வழங்கிய உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றிரவு தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குண்டு வெடிப்பில் இலங்கை அமைதி காக்கும் படையினர் நால்வர் காயம்
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் இணைந்து மாலியில் பணியாற்றிய நான்கு இலங்கை அமைதி காக்கும் படையினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றின் காரணமாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலியின் கிடால் பகுதியில் உள்ள அவர்களது முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் மற்றுமொரு வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்கி கவச வாகனத்தில்…
பொதுமக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஐ. நா. உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டம்
இலங்கையில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் அதன் செயற்பாடுகளை இலங்கையிலிருந்து நிறுத்திக் கொள்வதற்கு முன்னதாக இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வேறு நாடுகளுக்கு புகலிடம் பெற்றுத் தருமாறு கோரி கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு ( UNHCR ) முன் புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

