உள்ளூர்
வைத்தியரை கொலை செய்த யாசகர்
தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை…
பேருந்தில், மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில்…
அலி சப்ரி ரஹீம் கடத்திய தங்கம் அரசுடமையாக்கப்பட்டது
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்க தொலைபேசிகளே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் மொத்த பெறுமதி எட்டரை கோடி ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…
ஜூன் 21 ‘கனடா படுகொலை தினம்’அனுஷ்டிக்க வேண்டும் – விமல் வீரவன்ச
கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா படுகொலை தினம்’ என நாம் அனுஷ்டிக்க வேண்டும். இலங்கை தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் குறிப்பிட்ட கருத்து முறையற்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினார். சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிப்படைத்தன்மை வாய்ந்த சுயாதீன விசாரணைகளின் அவசியம் -கர்தினால்
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர்…
5 இலங்கை மீனவர்கள் இந்திய படையினரால் கைது
எல்லை தாண்டிச் சென்று இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைதுசெய்துள்ளனர். இந்தியாவின் தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் 60 மைல் நாட்டிகல் தூரம் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கிப் பிடித்தனர். அப்போது…
அரசியல் நியமனங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர்
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசியல் நியமனங்களை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டு விட்டு அரச நிர்வாகத்தை முறையற்ற வகையில் முன்னெடுத்து செல்ல முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்துக்காக பிரதேச செயலாளர்கள் ஆணையாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும்…
இறுதிக்கட்ட யுத்தத்தில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை – சரத் வீரசேகர
இறுதி கட்ட யுத்தத்தின் போது இரசாயன குண்டு தாக்குதல் பிரயோகிக்கப்படவில்லை. மூன்று இலட்சம் தமிழர்களை விடுதலை புலிகள் அமைப்பு பணய கைதிகளாக வைத்திருந்த போது எங்கு சென்றீர்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனை நோக்கி கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பந்தயம், சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை மேற்கோள்காட்டி…
தங்கம், கைத் தொலைபேசிகளுடன் அலி சப்ரி ரஹீம் MP அபராதம் விதித்து விடுதலை
தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை விமானநிலையத்தின் ஊடாக எடுத்து வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க பண்டாரநாயகக சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் செவ்வாய்க்கிழமை (23) காலை விமான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்ட போது, ஒரு தொகை தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட3.5 கிலோ…
போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் – மைத்திரி
நாட்டில் போதைப்பொருள் பாவனையால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் படிக்கும் பெண் பிள்ளைகள் கூட இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அத்தியாவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) வர்த்தமானியின் கட்டளைகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் போதைப்பொருள் வியாபாரம், பாவனை தீவிரமடைந்துள்ளது. ஐஸ், ஹீரோயின், கொக்கெயின், சிகரெட்…

