45 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ள தொகுதிகளைஎக்காரணத்துக்காகவும் மீண்டும் அதிகரிக்க முடியாது – மஹிந்த தேசப்பிரிய விளக்கம்

எல்லை நிர்ணயத்துக்கான தேசிய குழுவின் முழுமையான அறிக்கையை எதிர்வரும் 31ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். 45 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை எக்காரணத்துக்காகவும் மீண்டும் அதிகரிக்க முடியாது என அக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , எல்லை நிர்ணய தேசிய குழுவின் முழுமையான அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் , அது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ர|Pதியில் பிரதமர்…

Read More

இலங்கையிடம் எந்தவொரு கொடுப்பனவையும் கோரவில்லை- இந்தியா விளக்கம்

இலங்கை கடற்பரப்புக்குள் வெ வ்வேறு சந்தர்ப்பங்களில் எம்.டி. நியு டயமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்கள் தீ விபத்துக்குள்ளாகிய போது இந்திய கடற்படை தீயணைப்பு பணிகளுக்கு உதவியது. இதற்கான கொடுப்பனவை இந்தியா கோரியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 2020 செப்டெம்பர் மே – ஜூன் காலப்பகுதியிலும் , 2021 மே மாதத்திலும் இலங்கை கடற்பரப்புக்குள் எம்.டி.நியு டயமன்…

Read More

ஜனாதிபதியின் சரியான தீர்மானங்களே நாடு வழமைக்கு திரும்ப காரணம்அடுத்த 6 மாதங்களுக்குள் வங்கி வீதங்களைக் குறைக்க முடியும் – சாகல ரத்நாயக்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான தீர்மானங்களை அச்சமின்றி எடுத்தமையின் காரணமாகவே இன்று நாடு வழமைக்கு திரும்பியுள்ளது. அவரால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமாயின் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வங்கி வீதங்களைக் குறைக்க முடியும் என்று ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கிருலப்பனையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட…

Read More

மின்சாரசபை மறுசீரமைப்புக்கள் குறித்து ஜப்பானுடன் கலந்துரையாடல்

இலங்கை மின்சாரசபையின் தற்போதைய மறுசீரமைப்பு செயல்முறைகள் குறித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துக்கு விளக்கமளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜைக்கா நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதி டெட்சுயா யமடா உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இது குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சாரசபை மற்றும் மின் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் தற்போதைய மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஜைக்கா வழங்கிய உதவிக்கு இதன் போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மறுசீரமைப்பு செயலகத்தை நிறுவுவதற்கும்…

Read More

வவுனியாவில் 8 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் மக்களை அதிசயிக்க வைக்கும் வகையில் மாடொன்று கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம்  கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று எட்டு கால்களுடன் கன்று  ஒன்றினை ஈன்று மக்களை அதிசயிக்க வைத்துள்ளது. குறித்த கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் வருமானத்தினை ஈட்டுவதற்கு மாடுகளை வளர்த்து வருகின்றார். குறித்தநபர் வளர்த்து வரும் மாடு எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை பிரசவித்த நிலையில் குறித்த கன்று தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித…

Read More

வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரம் – நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவேளை ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறவேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இந்த விடயத்தை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. பதுளையை சேர்ந்த தமிழ் பெண்ணிண் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறும் என பிரதமர் உறுதியளித்துள்ளார் என பிரசன்ன…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சிங்கள அரசியல்வாதிகள் சிலரே திட்டமிட்டனர் – சந்திரிகா

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை  இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை  பலம்பொருந்திய…

Read More

கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் – சரத் வீரசேகர

கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம். மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என  ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  பந்தயம்,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச் ) சட்டமூலம் மீதான…

Read More

இன அழிப்புக்கு உள்ளானவர்களின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாது – சிறிதரன்

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை,இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் மார்புத்தட்டிக் கொள்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் நிம்மதியாக வாழ்கின்றீர்களா. இன அழிப்புக்கு உள்ளான எமது உறவுகளின் ஆத்மா நிம்மதியாக இருக்க இடமளிக்காது. சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய நீதியான தீர்வினை வழங்க  அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்…

Read More

PUCSL தலைவரை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான விவாதம் இன்று

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று(24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 2021 மார்ச் 14 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக ஜனக்க ரத்நாயக்க நியமிக்கப்பட்டார். எனினும், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியுடன் உருவாகிய மின்சார நெருக்கடிக்கான மாற்றுத்தீர்வுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைத்த போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் ஜனவரி…

Read More