சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்

இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Read More

புதிய வெளிநாட்டு வர்த்தகங்கள் ஈர்க்கப்படும் – ஜப்பான் அரச தலைவர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புதிய வெளிநாட்டு வர்த்தகங்களை ஈர்ப்பதற்கான இலங்கையின்  அர்ப்பணிப்பான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளார். ‘இலங்கை பொருளாதாரத்தின்  மீள்  கட்டமைப்பு மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புக்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ்  இடம்பெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை தூதரகம் ஆகியன இணைந்து  மேற்படி…

Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – மன்னிப்புச்சபை கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் இலங்கை பொலிஸாரினால் மே 18ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்…

Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு சென்றுள்ளனர். இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம் தொழில் வாய்ப்பு இல்லாததால் இங்கு வாழ வழியின்றி மக்கள் அபயம் தேடி அகதிகளாக இந்தியாவிற்கு செல்வது தொடர்ந்து வருகிறது. பொருளாதார சீரழிவு தொடங்கியது முதல் இலங்கையிலிருந்து இதுவரை 253 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர். இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயன் (46), அவரது மனைவி ரஜினி (45), மகள் தபெந்தினி (18)…

Read More

கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக…

Read More

சஜித் – சம்பந்தன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன்,நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மரண அடி மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Read More

மரணத்தில் பூத்த மலையகம் – வரலாற்றை குறிக்கும் நிகழ்வு நாளை யாழில்

மலையக மக்களின் வரலாற்றை பறைசாற்றும்  வகையில் மரணத்தில் பூத்த  மலையகம் எனும் மலையக மக்களின் 200 வருடங்களை குறிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை 27 ம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ்வீரசிங்க மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது. கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என் இன்பம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பெருந்தோட்டைதுறை மக்கள் குரல் அமைப்பின் இயக்குநர்  அன்ரனி ஜேசுதாசன் மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் அருட்பணி சக்திவேல் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான யோதிலிங்கம் அகில…

Read More

ஜப்பான் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்தார். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பாரிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதை கட்டாயப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

Read More

ஆசிரியர் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

புத்தளம் – தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தில்லையடி பாடசாலையொன்றில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. இதன்போது, கல்வி பொதுத் தராதர சாதாரண தர…

Read More

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் 31 க்கு முன்னர் ஆலோசனைப் பெறுங்கள் – பெப்ரல் அமைப்பு

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் இது வரையில் கிராம உத்தியோகத்தரிடமிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறாதவர்கள் 31ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலரை அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நாடி உரிய ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மக்களின் இறையாண்மையின் ஒரு அங்கமான வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு வாக்காளர்களாக அனைவரும் தம்மை பதிவு செய்வது கட்டாயத் தேவையாகும். வாக்காளர் பட்டியலில்…

Read More