இலங்கைக்கு சீனாவின் அசைக்க முடியாத ஆதரவு : சீன வெளிவிவகார பிரதி அமைச்சர்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர்  சன் வெய்டாங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் செவ்வாய்க்கிழமை (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார். இந்த நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்கு சீனாவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன…

Read More

பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு

மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத தகராறுகளை ஏற்படுத்தி நாட்டில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க நினைக்கும் பல்வேறு நோக்கங்களைக் கொண்ட குழுக்கள் மீது பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதை இது காட்டுகிறது. தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், கடந்த காலத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு…

Read More

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு வீட்டுக்கு

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

Read More

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை  புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக பிரகடனப்படுத்தும்  சன்னஸ் பத்திரம் ஜனாதிபதியால் கையளிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புண்ணியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி  தரப்பின் சிரேஷ்ட   சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய வண. உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் கையளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் பங்கேற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் நேற்று (28) பிற்பகல் மஹியங்கனை…

Read More

கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டு புத்தர் சிலை கவிழ்ப்பு

இமதுவ அகுலுகஹா பிரதேசத்தில் காணப்படும் புத்தர்  சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டி ஒன்று  உடைக்கப்பட்டு  அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கவிழ்க்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இருப்பினும்  புத்தர் சிலைக்கு  எவ்வித சேதமும்  ஏற்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த புத்தர் சிலையானது  மலர்  தூவப்பட்டிருந்த  பகுதியில் முகம் குப்புற வீழ்ந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பலர் பொலிஸுக்கு தகவல் வழங்கியதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – நதாசாவிற்கு 7 ம் திகதி வரை விளக்கமறியல்

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரியவை  ஜூன் ஏழாம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரிய கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.இலங்கையிலிருந்து வெளியேற முயன்றவேளை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது நிகழ்ச்சியின் போது பௌத்தமதம் பௌத்ததத்துவம் கிறிஸ்தவ மதம் ஆகியவற்றை அவமதித்தார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

Read More

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது-அருட்தந்தை சக்திவேல்

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என அருட்தந்தை சக்திவேல்  தெரிவித்துள்ளார்.மலையமக்களும் நீண்டகாலமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும்இன அழிப்பிற்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் மலைகய மக்கள்இனப்படுகொலையையும் சந்தித்துக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மலையக மக்களின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் மலையக மக்களின் மாண்பினைப் பாதுகாக்கும் அமைப்பு சார்பாக   இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்  வடகிழக்கு மக்களின் அரசியல்…

Read More

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்

மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு தான் இந்த மகாவலியின் செயல்பாடு என்றும் இதை முழுமையாக கண்டிப்பதாகவும் முழுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

Read More

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

இரண்டு அமைச்சு பதவிகளில் மாற்றம்?

எதிர்வரும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இரண்டு அமைச்சுப் பதவிகளிலும் மிக விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்தப் பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக காத்திருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன….

Read More