உள்ளூர்
இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 21.5 சதவீதமாக குறைந்துள்ளது.
தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (31) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கேரட்” தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 கேரட்” தங்கத்தின் விலை தப்போது 161,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள்…
இலங்கை குறித்து IMF இன் அறிவிப்பு
இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார். இன்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர் ஹெஷான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்ததாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை
எமது நாட்டு விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான அணுகுமுறை…
யாழ்நூலக எரிப்பின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு புதன்கிழமை (31) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் யாழ் பொதுநூல் நிலைய எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என குறிப்பிட்டனர்.
வவுனியா – புளியங்குளத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (31) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். செவ்வாய்க்கிழமை (30) இரவு தனது தோட்டத்திற்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். தூக்கில் தொங்குவதை அவதானித்த பொதுமகனொருவர் புளியங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான…
மக்களே அவதானம் ! சூரிய ஒளியால் கண்களுக்கு பாதிப்பு
சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும், தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நேரடியாக சூரிய ஒளி அதிகமாகப்படும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்ணாடிகள் அணிவதன்…
பன்றிகளை வெளியே கொண்டு செல்ல தடை
பன்றிகளிடையே பரவி வரும் வைரஸானது மேல் மாகாணத்திலுள்ள 4 பண்ணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நோய் தொற்று காணப்படும் பண்ணைகளில் இருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் K.K.சரத் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்று இதற்கு முன்னரும் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் இது வேகமாக பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாது என மேல் மாகாண கால்நடை…
IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இன்று இலங்கைக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா(Kenji Okamura) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(31) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கண்காணிக்கவுள்ளார். நாட்டின் பொருளாதாரத்…
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்தும் திருத்த பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம் – விமல்
ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்தும் வகையிலான சட்ட திருத்தப் பிரேரணையை ஜனாதிபதி கொண்டு வந்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மக்கள் தமது சமகால அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் போல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற இலங்கை மேலவை கூட்டணியின்…

