உள்ளூர்
மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கான 5.2 மில்லியன் டொலர் மானியம் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் கொரிய பொறியியல் நிறுவனத்தால் உருவாக்கப்படவுள்ளன. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள சந்திரிகா வாவி மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள கிரி…
ஒளி/ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடாக ஊடங்களை கட்டுப்படுத்த முடியாது – நீதி அமைச்சர்
ஒளி/ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்தின் மூலம் ஊடங்களையோ சமூக ஊடகங்களையோ கட்டுப்படுத்த முடியாது. மாறாக ஊடகங்கள் மேற்கொண்டு செல்லும் நடவடிக்கையை மேலும் சிறப்பாக கொண்டுசெல்வதற்கு உதவும் வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் கொண்டுவர இருக்கும் ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கை என தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திற்கு எந்த தேவையும் இல்லை. அவ்வாறான…
பிரதமர் தினேஷ் குணவர்தன – தாய்லாந்து பிரதமருக்கிடையில் சந்திப்பு
தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நாட்டு பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். பாங்கொக்கிலுள்ள அரச அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (31) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் செவாக் உற்சவத்தில் பங்குபற்றுவதன் ஊடாக இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் , வர்த்தக மற்றும் முதலீடுகளைப் போன்றே மத இணக்கப்பாடுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதமரின் இந்த சந்திப்பு அமைந்துள்ளது. இலங்கையும் தாய்லாந்தும்…
ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளியோம் – ஹர்ஷ டி சில்வா
திய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளமையால், அதற்கு பதிலாக ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றிக்…
அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளமை பொருளாதார முயற்சிகளுக்கு உந்து சக்தியாகும் – சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் விஜயத்தின் போது தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலகு ரயில் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும் இந்நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும் ஜப்பானிய பிரதமருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி மேற்கொண்ட தலையீடானது ஒரு மேம்பட்ட இராஜதந்திர…
பஸ் , முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன. முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண மீளாய்வு குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று(31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையில் திருத்தம்
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 318 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 385 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன்…
IMF இன் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கென்ஜி…
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு
கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார். இதேவேளை, கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜனாதிபதி இன்று விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று வியாழக்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இன்றிரவு 8 மணிக்கு ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 9 மாதங்களாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

