உள்ளூர்
காணாமல்போனவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிக்க எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர்
காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயத்துக்கு இதுவரை 21ஆயிர்தி 374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 3ஆயிரத்தி 170 முறைப்பாடுகள் தொடர்பாக பூரண விசாரணை நடத்தி முடித்துள்ளோம். எஞ்சிய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த வருடம் இறுதிக்குள் முடிப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஆராயும் அலுவலகத்தின் முன்னேற்ற நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு…
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றுள்ளது….
இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க எதிர்பார்க்கின்றோம்
இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இன்று தெரிவித்தார். நேற்று (31) பிற்பகல் பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பல அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாக கென்ஜி ஒகாமுரா தெரிவித்தார்….
வரிக் கோப்பு ஒன்றை திறப்பது குறித்து விளக்கம்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் எதிர்கால நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 வரவு செலவு திட்டத்தில் நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என்று ஒரு முன்மொழிவு இருந்தது. இதன்…
சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த ராஜபக்ஷ
நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது. அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அனுராதபுரம் ஸ்ரீ மகா விகாரை மற்றும் ருவன்வெளிசாய ஆகிய விகாரைகளில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்வி – அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால் ஆளும் தரப்பின் ஒருதரப்பினர் அதிருப்தியடைந்துள்ளார்கள் ? பதில் – அவ்வாறு இருப்பார்களாயின் அதுவும் நன்மைக்கே…
2048இல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக்குவதே இலக்கு- ஜனாதிபதி ரணில்
நாட்டின் பொருளாதார நிலைமை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக ஸ்திரப்படுத்தப்படுவதோடு , 25 ஆண்டுகளுக்குள் இலங்கை உயர் வருமானம் பெறும் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றப்படும். இதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் பங்களிப்புடன் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படும். இந்த இலக்கை அடைவதற்கு இளம் தலைமுறையினர் பெரும் பங்களிப்பை வழங்குவர் என உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களால் தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் புதிய வரிக் கொள்கைகள்…
கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானம்
வங்கி வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, நிலையான வைப்பு வீதம் மற்றும் நிலையான கடன் வசதிக்கான வட்டி வீதம், 250 அடிப்படை அலகுகளால் அதாவது 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இலங்கை மத்திய வங்கி இன்று(01) காலை அறிவித்தது. பணவீக்கத்தின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை வட்டி வீதங்களை உயர் பெறுமதியில் பேணியது….
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும் (Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஆராயப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல…
மத ஐக்கியத்தை பாதுகாப்பது என்ற போர்வையில் பேச்சுசுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை-மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையம்
அடிப்படைஉரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் ஆட்சியை அற்றுப்போகச்செய்யும்இலங்கையின் பலவீனமான அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தவிர்க்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளது இது தொடர்பில் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ்; நகைச்சுவை கலைஞர் நடாசா எதிரிசூரிய சமீபத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்து மாற்றுக்கொள்கைகளி;ற்கான நிலையம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது – மத ஐக்கியத்தை பாதுகாப்பது என்ற போர்வையில் கருத்துசுதந்திரத்தை முடக்குவதற்கான மிகச்சமீபத்தைய நடவடிக்கை இதுவாகும். ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது இதுவே…
மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு
மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் உடல்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர். இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள கபுகந்த சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (31) மாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொலன்னாவைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்த விதம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேவேளை, காலி கோட்டை கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு 35-40 வயது…

