உள்ளூர்
பிரதான வீதிக்கு பூட்டு
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஜயவா்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது. பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ டி சில்வா
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் – அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் உறுதி
இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும்…
கஜேந்திரகுமாரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அவருக்கு அனுமதி – சபாநாயகர்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவருக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். பொலிஸார் தங்கள் கடமைகளை செய்வதை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாராளுமன்ற சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச
பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்து அவரின் சிறப்புரிமையை பொலிஸார் மீறியுள்ளனர். பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ள எம்.பி. ஒருவரை பொலிஸார் கைது செய்ய முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.க்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள உரிமை இருக்கிறது. பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்…
ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்
தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் – பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை
சமூக ஊடகங்கள் மூலம் பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (5) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நபர் ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களை…
60 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்
நாட்டில் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற 60 வகையான மருந்துகளின் விலைகளை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 16 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளன. வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும். ஏனைய மருந்துகளின்…
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரண்; உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது. என்றாலும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொண்டால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு ஒத்திசைவாக அமைத்துக்கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) சபாநாயகரின் அறிவிப்பின்போதே இதனை அவர் சபைக்கு அறிவித்தார். சபாநாயகர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு எனும்…
அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக சட்டம் ஏன் சரியாக அமுல்படுத்தப்படவில்லை? – சஜித் கேள்வி
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ள போதிலும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 4.611 கிலோ தங்கத்தை (80 மில்லியன் பெறுமதி) கொண்டு வந்த நபருக்கு 70 மில்லியன் ரூபா…

