உள்ளூர்
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மீன்பிடி கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு கடற்படையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்படி, குறித்த மீன்பிடி படகு சீஷெல்சின் விக்டோரியா தலைநகருக்கு கொண்டு செல்லப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட…
இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் வீழ்ச்சி!
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதிகள் 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதில், வரத்தக பொருட்களின் ஏற்றுமதி 11.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதிகள் 3.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது இது 0.39% சரிவாகும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச நிர்வாக சேவை அதிகாரிகள் சுகவீன விடுமுறை போராட்டம்
அனைத்து அரச நிர்வாக சேவை அதிகாரிகளும் இன்று திங்கட்கிழமை (29) முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறிய அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல் உதயசிறி, “இன்று, கூட்டுக்…
யாழ். மயிலிட்டி கடலில் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்ட இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீட்பு
யாழ்ப்பாண கடற்பகுதியில் ஆபத்தான படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். மயிலிட்டி கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை (27) குடும்பஸ்தர் ஒருவர் தனது 2 வயது பிள்ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார். அவ்வேளை, படகினுள் கடல் நீர் புகுந்ததுடன், படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு, கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…
யாழில் இளைஞரைக் காணவில்லை!
யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்ததாகவும்…
கந்தக்காடு சம்பவங்களை தீர்க்க அவசர வேலைத்திட்டம்!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாடான சம்பவங்களை கட்டுப்படுத்த அவசர வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களும் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுவதே இது தொடர்பான முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதத்தில் 2 தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் பதிவாகின. தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் இதற்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டுமெனவும் புனர்வாழ்வு ஆணையாளர்…
பெண்களுக்கு தொந்தரவு செய்தால் – 109 க்கு அழைக்கவும்!
இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை பொலிஸை மையப்படுத்தி நடைபெற்றது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும்…
கடத்தப்பட்ட படகை மீட்க தீவிர முயற்சி
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லோரென்சோ புதா 4 நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது. அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் குறித்த படகு கடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 6 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது
மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 மீனவர்களும் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு…

