உள்ளூர்
பிரபாகரன் உயிருடன் இல்லை : எம்மிடம் ஆதரங்கள் உள்ளன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன. பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டே குறித்த ஆதரங்களை வெளியிடப்படாமலுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். அத்தோடு தற்போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான குழுக்கள் தொடர்பில் பாதுகாப்புதுறை மிக உன்னிப்பான அவதானித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக…
நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி
நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (Takafumi kadono) ஆகியோருக்கும் இடையில் நேற்று (05)…
உதயநிதி ஸ்டாலின் – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு
தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் மரணம்
இம்முறை ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் அங்கு மரணித்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து சென்ற இருவர் உயிரிழந்தனர். கொலன்னாவையை சேர்ந்த ஹாஜியானி ஒருவர் மாரடைப்பு காரணமாக செவ்வாயன்று (04) மக்காவில் மரணித்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிப்படுத்தியது. கொழும்பு 14-ஐ சேர்ந்த ஹாஜி ஒருவர் மதீனாவில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது மரணித்ததாக திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை, குருணாகலை – பானகமுவ பகுதியை சேர்ந்த ஹாஜி…
பௌத்த சாசனத்தை அவமரியாதைக்குள்ளாக்கும் தேரர்களுக்கு எதிராக நடவடிக்கை – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க
பௌத்த தேரர்கள் எனக் கூறிக் கொண்டு மிகவும் இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வழிமுறை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பௌத்த சாசனத்தை அவமரியாதைக்கு உள்ளாக்கும் பௌத்த தேரர்களை தொடர்ந்தும் அந்த ஸ்தானத்தில் வைத்திருக்கக் கூடாது என புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். மாககல்கந்தே சுதந்த தேரர் அண்மையில் ஜப்பானிலுள்ள விகாரையொன்றில் இளைஞர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது….
இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்க ஜப்பான் இராஜதந்திரிகளுடன் அரசாங்கம் பேச்சு
ஜப்பான் கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்படவிருந்து பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு கைவிடப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அந்நாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இலகு புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் கொழும்பிலுள்ள ஜப்பான் இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு மீண்டும் குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு…
தாய் வீட்டுக்கு சென்ற பெண் மீது துப்பாக்கிச்சூடு
மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டில் மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தாய் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது தாய் வீட்டின் முன் மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பிரிந்து சென்ற கணவருடன் ஏற்பட்ட தகராறு…
ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கமாட்டேன்
வலயத்தின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக எவருக்கேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வழி ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். உலகின் அனைத்து நாடுகளும் இலத்திரனியல் ஊடக பாவனையின் போது இவ்வாறான செயன்முறைகளை பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இலங்கையில் அந்தச் செயற்பாடுகளை…
கடமை தவறிய பொலிஸ் அதிகாாி பணி நீக்கம்
2019 ஆம் ஆண்டு உயிா்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஒழுக்காற்று மீறல்கள் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிம் அனுப்பப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி தனது குற்றத்தை…
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ்வாறு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கோட்டா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல்…

