உள்ளூர்
கிளிநொச்சியில் ஓ.எம்.பி. அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு
கிளிநொச்சியில் காணாமல் போனோரை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த அலுவலகத்தில் காணாமல் போனோர் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று (08) காலை ஆரம்பமாகியது. எனினும் இதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் குறித்த அலுவலகத்தினால் பதிவுகளுக்கு அழைக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதங்களையும் அலுவலகத்தின் முன் தீயிட்டுக் எறித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
13 ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனடாவிடம் கோரிக்கை
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டுமென சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் Marie-Louise Hannan-இடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர்…
இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகின்றார்
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இந்திய வெளிவிவகார செயலாளரின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதி 20ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை – யாழ் விமான சேவையை தினமும் முன்னெடுக்க நடவடிக்கை – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
இலங்கையின் அபிவிருத்தியில் சகல வழிகளிலும் இந்தியா முக்கிய பங்காளியாக இருக்கும். அந்த வகையில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையை தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார். இந்தியாவின் பிரபல பயண முகவர் நிறுவனமான இந்திய பயண முகவர் சங்கத்தின் (வுயுயுஐ) 67ஆவது மாநாடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்உற்பத்தி கூட்டுத்தாபனம் என்பன ஆரம்பிக்கவுள்ள 130 மெகா வோல்ட் மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இலங்கை மின்சாரசபை, இந்தியாவின் தேசிய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தாபனம் , ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பவற்றின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. முதல் கட்டமாக…
இராஜதந்திர உறவை கொண்டாடும் வகையில் தூதுவர்கள் மலைநாட்டில் நட்புரீதியான சுற்றுப்பயணம்
இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 9 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கே எல்ல ஒடிஸி விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது. சர்வதேச சமூகத்துடனான இலங்கையின்…
கடனை திருப்பி செலுத்துவதற்கு 12 வருடகால அவகாசம் – இந்திய கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் தலைவர்
இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்கு 12வருடகால அவகாசத்தை இந்தியா வழங்கவுள்ளது. இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்காக இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீள திருப்பி செலுத்துவதற்கு 12வருடகால அவகாசத்தை வழங்ககூடு;ம் என இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன அதன் பி;ன்னர் மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் வெளியாகும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தி;ற்குள் எங்கள் பணத்தை மீட்டெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று…
சபாநாயகருக்கு எதிராக பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்திற்கு எதிர்க்கட்சியினர் கடிதம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 34 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகரின் பக்கசார்பான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பிலான பிரேரணையை நிறைவேற்றும்…
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுகின்றன – சுமந்திரன்
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுவதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது இந்த நாட்டிலே பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு சூழ் நிலையிலே, இவ்வாறான சாட்சியங்கள் கிடைக்கிறபோது,…
கொள்கை வட்டி வீதம் குறைப்பு
வங்கி வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate – SDFR) மற்றும் நிலையான கடன் வசதிக்கான வட்டி வீதம்(Standing Lending Facility Rate – SLFR) 200 அடிப்படை அலகுகளால் அதாவது 2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான நாணயக் கொள்கை நிலைப்பாட்டை இலங்கை மத்திய வங்கி நேற்று (06) காலை அறிவித்தது. பணவீக்கத்தின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை…

