உள்ளூர்
மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மலையத்தில் பல்கலைக்கழகமொன்றை அமைப்பது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நுவரெலியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது , கொட்டகலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக சர்வதேசத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார். அந்தவகையில் மலையக…
உயர்தர பரீட்சை பெறுபேறு குறித்து வெளியான புதிய தகவல்!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2022) பெறுபேறுகளை எதிர்வரும் ஆகஸ்ட் இறுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற வேண்டிய உயர்தர பரீட்சைகளை நவம்பரிலும் , டிசம்பரில் நடைபெற வேண்டிய சாதாரண தரபரீட்சைகளை 2024 மார்ச்சிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2019/2020 உயர்தர பரீட்சைக்கு தோற்றி கல்வியியற்…
புஸ்ஸலாவையில் சுற்றுலா பஸ் விபத்து : 8 பேர் காயம்
புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளுடன் நுவரெலியா சென்ற குறித்த பஸ் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் , பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் கொத்மலை மற்றும் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் – சென்னை விமான சேவை எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்
சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போது வாராந்தம் 4 தடவைகள் இயங்கும் விமான சேவையை நாளாந்தம் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 67ஆவது மாநாட்டில் காணொளியூடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை…
பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க இதுவரை தீர்மானிக்கவில்லை – மஹிந்தானந்த அலுத்கமகே
ஜனாதிபதி வேட்பாளரொருவரை பொதுஜன பெரமுனவிலிருந்து களமிறக்குவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை ஆதரிப்பது தொடர்பில் கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம். எவ்வாறிருப்பினும் எமது ஆதரவின்றி எவருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் கட்சி ரீதியில் வேட்பாளரொருவரை களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அவ்வாறு எவரும் கூறவுமில்லை. எனினும் அடுத்து யார் ஜனாதிபதியானாலும்…
தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா கட்டாயம் பங்களிக்க வேண்டும் – மனோ கனேஷன்
இலங்கையிலுள்ள தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின் போது , வெறுமனே விருந்தோம்பலை மாத்திரம் வழங்காது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேஷன் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுமாறு வலியுறுத்தி தாமும் கடிதமொன்றை எழுதவுள்ளதாகவும் மனோ கனேஷன்…
ஆற்றில் கவிழ்ந்த பஸ்: 10 பேர் உயிரிழப்பு
பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று மனம்பிட்டிய கொடலீய பாலத்தில் இருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
28ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சை திணைக்களம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை முறைமையில் மாத்திரம் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்கு (www.doenets.lk , www.onlineexams.gov.lk) பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி செயலியான ‘DoE’ இன் ஊடாக அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து அதற்கமைய சரியாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச…
பெண் மரணம்: விசாரணைகளை முன்னெடுக்க விசேட வைத்திய நிபுணர்கள் குழு நியமனம்
கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் A.R.M. தௌபிக் தெரிவித்தார். எவ்வாறாயினும், கண் வில்லை பொருத்தும் சத்திரசிகிச்சைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கண் சத்திரசிகிச்சையின் பின்னர் 34 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். கொஸ்கொட – பொரலுகெட்டிய பகுதியை சேர்ந்த 34 வயதான ஹிமாலி வீரசிங்ஹ எனும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே…
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிரான மனு மீது விசாரணை
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (07) மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்தில் நிதி அமைச்சர்களாக பணியாற்றிய பசில் ராஜபக்ஸ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் W.D.லக்ஷ்மன், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர மற்றும் அப்போதைய அமைச்சரவைக்கு எதிராகவே…

