உள்ளூர்
இரு மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்
பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். குறித்த மருந்து தொகை நாளை(13) நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அவர் கூறினார். கடந்த காலங்களில் குறித்த மயக்க மருந்தினைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்கள் சிலர் உயிரிழந்தமையை அடுத்து, குறித்த மயக்க மருந்து தொடர்பில் சுகாதார தரப்பினர் தமது…
ஜனாதிபதி ரணிலுக்கு இந்தியாவில் அன்பான வரவேற்பு காத்திருக்கிறது- இந்திய வெளியுறவுச் செயலாளர்
இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பு காத்திருக்கிறது. ஜனாதிபதியின் இந்த விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் சாதகமான மாற்றத்துக்கான ஒரு புள்ளியாக அமையும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவத்ரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தரப்பினருடனான சந்திப்பின் போது கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் ஊடகவியலாளர்கள் சிலருடனான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : என்னுடைய இந்த குறுகிய கால பயணத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில்…
உயர்தர பரீட்சை நடைபெறும் தினம் குறித்த தகவல் வெளியானது!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று அதன் பின்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உயர்தர பரீட்சைகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படாமல் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் நவம்பரில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை டிசம்பரில் நடைபெற வேண்டிய…
ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ளோருக்கு நியமனம்
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமன கடிதங்களை வழங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்துக்கு நேற்று…
சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துமன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப் பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து , மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப் பை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம் பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு…
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த 15 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று முன்தினம்(09) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 15 தமிழக…
அஸ்வெசும தொடர்பில் வெளியான புதிய தகவல்!
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் இதுவரையில் 968 000 ஆட்சேபனைகளும் இ 17 500 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இவற்றை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய இவை மீளாய்வு செய்யப்பட்டு இ தகுதியுடைய அனைவரும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும். மேலும் இறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் எதிர்வரும் ஆகஸ்டில் வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி ரணில்!
சனத்தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சனத்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2023/2024ஆம் ஆண்டுகளில் சனத்தொகை மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2012ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனம்பிடிய பஸ் விபத்தில் கிழக்கு பல்கலை மாணவர்கள் இருவர் பலி
பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மனம்பிட்டிய கொடலீய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு , சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 12 பேரில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் இறுதி ஆண்டில் பயின்று வந்த 23 வயதுடைய சமித திஸாநாயக்க மற்றும் தமித் சாகர என்ற மாணவர்களே…
நாட்டை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா நேற்று திங்கட்கிழமை (10) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன…

