உள்ளூர்
அனைவருக்கும் நவீன டிஜிட்டல் அடையாள அட்டை – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்
இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் னுபைi – நுஉழn வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாகவும் , டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…
கொழும்பில் 14 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பு மாநகசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை நீர் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2024 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர் சேர்க்கை செயல்முறை தொடர்பான அறிவுறுத்தல்களை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு , பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் வழங்கப்பட்ட மாதிரி மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி…
சிறுவர்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் : பெற்றோருக்கு வைத்தியர்களின் அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது சிறுவர்கள் மத்தியில் தட்டம்மை , புற்று நோய் மற்றும் நீரழிவு நோய் பரவும் வீதம் சற்று அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே பெற்றோர் தமது குழந்தைகளுக்கு உரிய வயதில் அம்மை நோய் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதோடு , ஏனைய நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற உணவு பழக்கங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சிறுவர்கள் மத்தியில் புற்று நோய் அதிகரித்து…
அழகியல் பாடநெறிகளுக்கான செயன்முறை பரீட்சைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஆரம்பம்
2022 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் அழகியல் கற்கைசார் பாடநெறிகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பரீட்சைகளை ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட செயன்முறைப் பரீட்சைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைமையே மாற்றங்களின்றி இவ்வருடமும் பின்பற்றப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தமக்கான பரீட்சை அனுமதி…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்று (12) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த மனித புதைக்குழியிலிருந்து மீட்க்கப்பட்ட மனித எச்சங்கள் இறுதி யுத்தத்தில் சரணடைந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் கொக்குத்தொடுவாயில் அடையாளம்…
அஸ்வெசும திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குறித்து விசேட அவதானம் : நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் பெருமளவான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படாமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தன விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சமூர்த்தி கொடுப்பனவைப் பெறும் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 747 குடும்பங்களில் 7 இலட்சத்து 87 ஆயிரத்து 653 குடும்பங்கள் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆட்சேபனைகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு உள்ளாகாத பயனாளர்களுக்கு இம்மாத இறுதிக்குள் கொடுப்பனவுகள் செலுத்தப்படும்…
ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு கடிதம்!
இலங்கை தமிழரசுக்கட்சி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கடிதம் அனுப்ப தீர்மானித்துள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ள நிலையில் , அவரிடம் வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்களைக் குறிப்பிட்டு இக்கட்சிகள் கடிதம் அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே பிரதமர் மோடிக்கான கடிதத்தை , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்களுக்கு மயக்க மருந்துகள் காரணமல்ல – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக பதிவாகும் மரணங்கள் தொடர்பில் வெ வ்வேறு தரப்பினராலும் , பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான மரணங்களுக்கு சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளே காரணம் எனக் கூறப்படுவது உண்மையல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கண்டி வைத்தியசாலையில் பூஞ்சை நோய் காரணமாக 7 நோயாளர்கள்…
பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை : விரைவில் சட்டமூலம் என்கிறது அரசாங்கம்
பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அண்மைக் காலங்களில் பௌத்த மதகுமார்கள் சிலர் விகாரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நேற்று செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற…

