உள்ளூர்
கட்சி பேதமின்றி தேர்தலுக்காக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அரசாங்கம் பல்வேறு பொய்யான காரணங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளது. எனினும் அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத முயற்சிகளை முறியடித்து தேர்தலை நடத்துமாறு கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து குரலெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர்…
கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை மீள ஆரம்பம்
அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (15) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. இதற்கமைய, கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் M.J.இந்திபொலகே தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம்…
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து…
தெமோதரை பகுதியில் பஸ் விபத்து : 15 பேர் காயம்!
பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று சனிக்கிழமை (15) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு – பதுளை தனியார் பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை ஹாலி எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கலைப்பிரிவில் கற்வர்களுக்கு தாதியர் பயிற்சி – ஜனாதிபதியின் விசேட ஆலோசனை
தாதியர் ஆட்சேர்ப்பின்போது கலைப் பிரிவில் கல்வி கற்றாலும் தாதியர் பயிற்சியில் உள்வாங்கக் கூடிய வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 2024 ஆம் ஆண்டு இறுதி வரை வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிக்கவும், விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார…
சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை- இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்
சர்வதேச பல்கலைக்கழகங்கள் மூன்றின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இரு பல்கலைக்கழகங்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்தோடு பல்கலைக்கழகங்களுக்குள் அரசியல் செயற்பாடுகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர் , கல்வியுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாட தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…
முதலீட்டு சபை – சினொபெக் நிறுவனத்துக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை முதலீட்டு சபை மற்றும் சினொபெக் எனர்ஜி லங்கா தனியார் நிறுவனம் என்பவற்றுக்கிடையில் இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைத்து , எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்துக்கமைய சினொபெக் நிறுவனம் 100 மில்லியன் டொலர் முதலீட்டில் எரிபொருள் இறக்குமதி , களஞ்சிப்படுத்தல் மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்கவுள்ளது. அதற்கமைய தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 150 தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மேலும் 50…
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பது இந்தியாவின் உறுதிப்பாடாகும் – உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
இலங்கையை பொருளாதார, பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தினதும் , வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும். இது இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் வாக்குறுதியாகும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். கொழும்பு தாஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக இலங்கையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை விரிவுபடுத்துவதன் மூலம்…
பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழக்க காரணம் என்ன? – வைத்தியர்கள் விளக்கம்
கடுகன்னாவை – பொத்தபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய சமோதி சந்தீபனி வயிற்று வலி காரணமாக கடந்த திங்கட்கிழமை கெட்டபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் செவ்வாய்கிழமை அதிகாலை அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பேராதனை வைத்தியசாலையில் அவருக்கு ஊசி ஏற்றப்பட்டதன் பின்னரே உடல் நிலை மோசமடைந்து , சமோதி உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். சமோதிக்கு எதற்காக அந்த ஊசி ஏற்றப்பட்டது? அது என்ன ஊசி என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவுள்ளது….
அரச அங்கீகாரத்துடன் நவம்பரில் மலையகம் – 200 விழா
மலையகம் – 200 எனும் விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மலையகத் தமிழர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்களது கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலும் விழாவொன்று நடத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கையொன்றின்…

