மோடிக்கான கடிதம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று(17) இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு – கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இரா.சம்பந்தன் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில்…

Read More

மீண்டுமொரு பஸ் விபத்து ;ஒருவர் பலி : 6 பேர் காயம்

கரடகொல்ல பிரதேசத்தில் , எல்ல – வெல்லவாய வீதியில் இன்று காலை பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியில் உள்ள உமாஓயா அபிவிருத்தித் திட்ட அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் குறித்த பேரூந்தின் சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சுகாதாரத்துறையில் பதிவாகும் சர்ச்சைகள்தீர்வு காண விசேட குழு நியமனம்

சுகாதாரத்துறையில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து , இரு வாரங்களுக்குள் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தெனுனு டயஸ் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர, பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பதி, வைத்தியர் செனிதா லியனகே, பேராசிரியர் நிதுஷி சமரநாயக்க, பேராசிரியர் எஸ்.எஸ்.பி.வர்ணகுலசூரிய, வைத்தியர் பிலிப் எச். லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்ததாகக் கூறி…

Read More

அரிசி இறக்குமதிக்கு இனி அனுமதியில்லை : அரசாங்கம்

அரிசி உற்பத்தியில் ஓராண்டு காலத்துக்குள் தன்னிறைவடைந்துள்ளோம். எனவே இனி எந்தவொரு காரணத்துக்காகவும் பாஸ்மதி தவிர்ந்து வேறு எவ்வகையான அரிசி இறக்குமதிக்கும் அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் தேவைக்காவே பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் , 2025இல் ஏனைய அனைத்து பயிர்செய்கைகளிலும் 80 வீதம் தன்னிறைவடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே…

Read More

தபால் , முத்திரை கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்படுமா?இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார விளக்கம்

அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதே தவிர , அதனை தனியாருக்கு விற்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார , முத்திரை கட்டணங்களையோ அல்லது தபால் கட்டணங்களையோ அதிகரிக்க எதிர்பார்க்கவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக புதிய சட்ட மூலம்…

Read More

நம்பிக்கையில்லா பிரேரணை இவ்வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் – காவிந்த ஜயவர்தன

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் உதவி செயலாளர், டொக்டர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

Read More

நுண்ணுயிர் கொல்லி மருந்தின் 3 தொகுதிகள் பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கம் – சுகாதார அமைச்சு

நுண்ணுயிர் கொல்லி மருந்தின் 3 தொகுதிகளை தற்காலிகமாக பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த மருந்து தொகுதியை வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி தொகுதி மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் இரு நோயாளர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய தடுப்பூசி தொகுதி ஆகியனவே இவ்வாறு பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கண்டி தேசிய வைத்தியசாலையில் நுண்ணுயிர் கொல்லி மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் ஒவ்வாமைக்குள்ளான நோயாளிகளின் நிலை…

Read More

யாழ். மக்களுக்கான வாய்ப்பு!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 நேற்று (15) யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது.குளோபல் பெயார் இன்றும் (16) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது.ஆரம்ப நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…

Read More

இலங்கை விமானிகளின்றி பறக்கவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தார். 260 விமானிகள் கொண்ட குழு…

Read More

இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் 2,000 சிறுவர்கள்

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது. வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார். மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளதாக அவர் கூறினார். இதற்கான தீர்வாக…

Read More