உள்ளூர்
தென்னிலங்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் 13ஐ அமுல்படுத்த முழுமையான ஆதரவு – சுதந்திர கட்சி அறிவிப்பு
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தற்போதும் உறுதியாகவுள்ளோம். எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் போது , அது தென்னிலங்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பில் சிந்தித்து மிக அவதானத்துடன் தீர்மானிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இந்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டுடன் இன்றைய சர்வகட்சி மாநாட்டில் சுதந்திர கட்சி பங்கேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள சு.க….
பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமம்தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; அரசாங்கம் உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும். இந்தக் காணி உரிமத்தை வழங்குவதில் தற்போது காணப்படும் நடைமுறை சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்விடயத்தில் அவதானத்துடனும் , உணர்வுபூர்வமாகவும் செயற்பட்டு வருவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் இல்லாத விடயம் கவலைக்குரியது. இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கமும் , பெருந்தோட்ட நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டியது…
தொழில்நுட்பக் கோளாறு ! பிரதான ரயில் சேவைக்குப் பாதிப்பு !
ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரதான ரயில் சேவைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளன. இதனால் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Q.R. கோட்டா அதிகரிக்கப்படுமா?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் அதிகபட்ச விலைகளை மாத்திரம் தீர்மானிக்கக் கூடியவாறு புதிய எரிபொருள் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக , விரைவில் கியூ.ஆர். கோட்டாவை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இம்மாதம் முதல் எரிபொருளுக்கான புதிய விலை சூத்திர முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதாவது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்…
மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு ; பாதாள உலகக் குழு உறுப்பினர் பலி!
மினுவாங்கொடை – மஹகம பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடை – மஹகம பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மீது குறித்த சந்தேகநபர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன் போது விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப்பிரயோகத்தின் போதே சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த 29 வயதான பாதாள உலகக் குழு உறுப்பினரான மனிக்குகே கசுன் லக்சித…
ஜனாதிபதி ரணில் இன்று டெல்லி விஜயம்; நாளை பிரதமர் மோடியை சந்திப்பார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மதியம் 1.30க்கு இந்தியா செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்துள்ளது. தனது டெல்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும்…
உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையவழியூடாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுடன் இந்த கால அவகாசம் நிறைவடையவுள்ளது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட கால அவகாசத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும் முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது. எவ்வாறிருப்பினும் இரண்டாவது முறை அல்லது மூன்றாவது…
காணிகளை விடுவிப்பதற்கான வடக்கு , கிழக்கு மக்களின் கோரிக்கை நியாயமானது – அரசாங்கம்
வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவை நிச்சயம் விடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உறுதியளித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , 1980ஆம் ஆண்டுகளின் பின்னர் வடக்கு…
பாடசாலை தவணைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைவதாகவும் , இரண்டாம் தவணை 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உடனடியாக முடிவெடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (18) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ”இது அனைத்து…

