உள்ளூர்
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்துடன் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை உரையுடன் இன்று புதன்கிழமை (7) ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் 8, 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70(1) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். ஐந்தாவது கூட்டத்தொடரை (புதன்கிழமை) ஜனாதிபதியின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதுடன்,காலை 10.30…
இலங்கையின் இன நல்லிணக்கமும் மத தலைவர்களின் கருத்துக்களும்
போரின் பின்னர் இலங்கையில் ஏற்பட வேண்டிய இன மற்றும் மத நல்லிணக்கங்களை ஏற்படுத்துவதில் அனைத்து அரசாங்கங்களுமே தோல்விக் கண்டுள்ளன. இதன் தாக்கமானது மற்றுமொரு இன மோதல்களை ஏற்படுத்தும் என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. எனவே மத தலைவர்கள் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பாதுகாப்பதில் முன்னின்று செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
கிழக்கு, மலையகத்தின் அபிவிருத்தி குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுரகுமார – புதுடில்லியில் முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.இந்திய வெளிவிவகாரஅமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.எங்கள் இருதரப்பு உறவுகள் குறித்தும் அதனை மேலும் வலுப்படுத்துதால் உருவாகக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்து இந்த சந்திப்பின்பொது ஆராயப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் பொருளாதார சவால்கள் முன்னோக்கிய பாதை குறித்தும் ஜேவிபி தலைவருடனான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியா தனது அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாகவும் சாகர் கொள்கை காரணமாகவும் இலங்கையின்…
மாணவர்கள்மீதான தாக்குதல்கள் இலங்கை அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகின்றது -நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா உறுப்பினர்கண்டனம்
இலங்கையின் சுதந்திரதினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது இலங்கை அரசின் காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. என கனடாவிலிருந்து நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.புலம்பெயர்தேசமாக கண்டனம் ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை புறக்கணிக்கும் விதமாகவும் அந் நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அமைதி வழியில் பேரணி சென்ற அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள்மீது மிகவும் கொடூரமான…
சுதந்திர தினத்தை நாம் எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நாம் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு யாருக்கும் அடிமையாகாமல் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சுதந்திரமான நாடாக செயல்படுகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் கீழ் காலனித்துவ நாடாக இல்லாவிட்டாலும் அரசியல் சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும், பொருளாராத சுதந்திரமும் இல்லாத நாட்டில் சுதந்திர தினத்தை நாம் எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது? என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 83 ஆவது கட்டமாக காலி…
இலங்கையுடனான கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளது – சுதந்திர தினத்துக்கான செய்தியில் அன்டனி பிளிங்கென்
இலங்கையுடன் கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.இலங்கையின் 76வது சுதந்திரதினத்தையோட்டி இலங்கை மக்களிற்கான வாழ்த்துச்செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டு என்பது பகிரப்பட்ட விழுமியங்கள் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு சுதந்திரமான வெளிப்படையான பாதுகாப்பான இந்தோ பசுபிக் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென் எங்கள் உறவு பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் முதலீடு அத்துடன் கல்விபரிமாற்றங்கள் அறிவியல்…
இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று (30) முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், சுதந்திர தின கொண்டாத்திற்காக 3ம் திகதி மதியம் 2 மணி முதல் 4ம் திகதி சுதந்திர தின விழா நிறைவடையும் வரையிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும்…
ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு
கொழும்பில் இன்று (30) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம்…
சுதந்திர தின ஒத்திகையில் அனர்த்தம்
சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பாரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

