உள்ளூர்
நீர் கட்டண மாற்றம் தொடர்பான முழு விபரம்
நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார். இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் பெருந்தோட்ட வீடுகளுக்கான நீர் கட்டணங்கள்…
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று(03) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இன்று(03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சன நெரிசலை குறைப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு…
இந்திய ரூபாய் தொடர்பில் விளக்கம்
இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றில் மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது. உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…
புதிய மருத்துவ சட்டமூலத்தை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு
மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள்தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தவிர்த்து, சிறந்த சுகாதார சேவையையும், பொது நலனையும் உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய காலத்திற்கேற்ற மாற்றங்களை ஆராய்ந்து புதிய மருத்துவச் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், சட்ட வரைஞர் மற்றும் இலங்கை மருத்துவ…
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் நீர் கட்டணம்
இன்று (02) நள்ளிரவு முதல் நீர் கட்டணம் 50 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
சினோபெக் நிறுவனம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதேபோல், அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும திட்டத்துக்கு தெரிவு செய்யப்படாதோருக்கு தொடர்ந்தும் சமூர்த்தி கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் ஷெஹான்
சமுர்த்தி கொடுப்பனவை பெறும் குடும்பங்களில் அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கும் குடும்பங்களில் அஸ்வெசும திட்டத்திற்கு தகுதி பெறாத 393 097 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை தொடர்ந்து வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றவர்கள் விரைவாக தமது வங்கிக் கணக்கை திறக்குமாறு…
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இலங்கைக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும்: மிலிந்த மொரகொட
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து நன்மையடையும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கையின் நம்பிக்கையானது இணைப்புப் பாதைகள், பாலங்கள், குழாய் கட்டமைப்புகள், மின்சார பரிமாற்ற கட்டமைப்பு, விமான சேவை உட்கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் ஆற்றலில் தங்கியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே எட்டப்பட வேண்டும் எனவும் The Hindu-விற்கு வழங்கிய நேர்காணலில் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் வளர்ச்சியடைய நிலத்தொடர்பு மிகவும் அவசியமானது எனவும் இந்தியாவிற்கான…
இந்திய உயர்ஸ்தானிகர் – தமிழ் தேசிய கூட்டமைப்புக்கிடையே இன்று சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இன்று(01) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சில காரணிகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் மற்றும் சர்வகட்சி மாநாடு ஆகியவற்றின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையில் திருத்தம் ; அதிகரித்தது பெற்றோல் விலை
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு லீட்டர் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாகும். ஒரு லீட்டர் 95 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும். ஒரு லீட்டர்…

