அடுத்த வருடம் முதல் வருடத்திற்கு ஒரு தவணை பரீட்சை – கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

5 ஆவது ஆசிய பசுபிக் மன்றத்தை இலங்கையில் நடத்தத் திட்டம்

எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum) இலங்கை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். காலநிலை நீதியை உறுதிப்படுத்துதல், இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதை துரிதப்படுத்துவதற்கு பாரம்பரியமற்ற மாற்று அணுகுமுறையை பேணும் பொதுவான நோக்கத்துடன், காலநிலை நியாய மன்றம் (Climate Justice Forum) ஒன்றை…

Read More

மீண்டும் இலங்கை வரும் சச்சின்?

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவுக்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான யுனிசெப் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அவர் , சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கைக்கான விஜயம் தொடர்பான அறிக்கையை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

13 ஆவது திருத்தம் : கட்சித் தலைவர்களுக்கு விசேட அறிவித்தல்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் 15-08-2023 ஆம் திகதிக்கு முன்னதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 26-07-2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைத் திட்டம் : 450 மில்லியன் ரூபாவை வழங்கியது இந்தியா

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மெதிவ், தொழில்நுட்ப அமைச்சின்…

Read More

கடன் மறுசீரமைப்பு விவகாரம் ; பாராளுமன்றம் தவிர்ந்த வேறு எவருடைய பரிந்துரைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கப்போவதில்லை

-ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தை தவிர்ந்த வேறு எவருடையதும் யோசனைகளையோ நிபந்தனைகளையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை உருவாக்குவதாக ஏற்றுக்கொண்ட சவாலை அவ்வண்ணமே நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (04) நடைபெற்ற…

Read More

கச்சத்தீவை நாம் மீட்போம் : அண்ணாமலை

மத்திய அரசை வலியுறுத்தி மீண்டும் கச்சத்தீவை மீட்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் குப்புசாமி அண்ணாமலை சூளுரைத்துள்ளார். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர் படகுகளை மீள கைப்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கச்சத்தீவை மீட்பதே அதற்கான நிரந்தர தீர்வு என தெரிவித்துள்ளார்.

Read More

விவசாய அமைச்சரின் வீட்டிற்கு பேரணியாகச் சென்ற விவசாயிகள்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பாக இன்று (04) முற்பகல் ஒன்றுகூடிய வலவ வலய விவசாயிகள் தமது செய்கைகளுக்குத் தேவையான நீரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அநுராதபுரம் – அங்குனுகொலபெலஸ்ஸ நகரத்தில் இன்று முற்பகல்  விவசாயிகளின் எதிர்ப்பு பேரணியொன்று ஆரம்பமானதுடன், மகாவலி அரச விவசாயிகளின் ஒன்றியமும் அகில இலங்கை விவசாய சம்மேளனமும் இந்த பேரணியை ஏற்பாடு செய்தன. சமனலவெவ  நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு உடனடியாக நீரை விநியோகிக்குமாறு இதன்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  விவசாய அமைச்சரின்…

Read More

13 தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 26 ஆம் திகதி…

Read More

அமைச்சர் அலி சப்ரி நாளை ஈரான் விஜயம்

ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி நாளை வெள்ளிக்கிழமை (4) அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது , அமைச்சர் அலி சப்ரி அங்கு பல முக்கிய சந்திப்புக்களிலில் ஈடுபடவுள்ளார். அதற்கமைய இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரைசியை மரியாதை நிமித்தம்…

Read More