இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 30 நாட்களில் மாத்திரம் 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று(07) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச்…

Read More

இலங்கை வந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தெற்காசியாவுக்கான யுனிசெஃப் பிராந்திய நல்லெண்ண தூதராக இலங்கைக்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று கேகாலைக்கு விஜயம் செய்தார். “கிரிக்கெட் கடவுள்” அல்லது “மாஸ்டர் பிளாஸ்டர்” என்று அன்புடன் அழைக்கப்படும் டெண்டுல்கர் இரண்டு பள்ளிகளுக்குச் சென்று அங்கு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த மாணவர்களுடன் உரையாடினார்.

Read More

13 ஆவது திருத்தம் : தென்னிலங்கை மக்கள் அச்சமடையத் தேவையில்லை – சிவநேசதுரை சந்திரகாந்தன்

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு துண்டாடப்படும் என்று தெற்கில் உள்ள…

Read More

இலங்கைக்கு ஈரான் வழங்கியுள்ள வாக்குறுதி

இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று (06) தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈரான் – இலங்கை கூட்டு பொருளாதார ஒத்துழைப்பு ஆணைக்குழு மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார். ,அதேநேரம் ஏகாதிபத்திய மற்றும் சுயநல வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் இலங்கை கவனமாக இருக்க வேண்டும்…

Read More

மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது : அமைச்சர் விளக்கம்

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று மின்கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது. வருடாந்தம் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாத்திரம் மின்கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும் என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , மின் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் , தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவ்வாறு இதனைப் பதிவிட்டுள்ளார். அத்தோடு திட்டமிடப்பட்ட…

Read More

பயிற்சி விமானம் விபத்து : இரு விமானப்படை வீரர்கள் பலி

திருகோணமலை, சீனன்குடா விமானப்படை தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பயிற்சி விமானம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் விபத்திற்குள்ளானதாக விமானப்படைத் தளபதி குறிப்பிட்டார்.

Read More

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பல்வேறு நோய்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் உள்ள சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா கூறுகையில், இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே இந்த நாட்களில் அவர்களுக்கு அதிக திரவங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், நிலவும் வறட்சியான காலநிலையினால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சிறுவர்களிடையே பரவலாக பரவக்கூடும் என்றும்…

Read More

மன்னாரில் காற்று மின்உற்பத்தி நிலையம் திறப்பு

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட 15 மெகாவோட் காற்று மின்சக்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காற்றாலை மின்உற்பத்தி நிலைய திறப்பினைக் கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்தின் ஊடாக தங்கள் கடற்றொழில் நடவடிக்கைகள் பாரிளவில் பாதிக்கப்படும் என்பதோடு , அது தமது வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தும் என்பதால்…

Read More

ஈரான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சருடனான சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்கள் , வர்த்தகம், சுற்றுலா, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் உறவுகளை விரிவுபடுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்தோடு இவ்விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய சாத்தியமான ஒப்பந்தங்கள் தொடர்பிலும் , ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தகளை செயல்படுத்தல் தொடர்பிலும் இரு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.   மேலும் ஏனைய நாடுகளுடன் நட்பு…

Read More

மலையக மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. எனவே, இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள்…

Read More