உள்ளூர்
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கூட்டமைப்பு , டிரான் அலசுடன் பேச்சு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை பகிர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன , அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக உள்ளிட்டோரும் , கூட்டமைப்பு தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்…
EPF தொடர்பான மனு விசாரணைகளின்றி தள்ளுபடி
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி குறைக்கப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைகளின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பின்னரே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு நீதி கோரி 2000 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு, கிழக்கு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு நீதி கோரி 2000 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தம்பிலுவில் விஷ்ணு கோவில் முன்பாகவிருந்து அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியூடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை
மாகாண சபை தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தம் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு இன்று அறிவித்தார். மாகாண சபைகளுக்கான மூன்று வருட திட்டத்தையும் ஜனாதிபதி முன்வைத்தார். மாவட்ட விகிதாசார முறையில் தேர்தல் நடத்தல் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 % அல்லது அதனை விடவும் அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி, மாகாண சபைத்…
பொது மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து குடிநீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்….
மாணவர்களுக்காக ஜனாதிபதி அலுவலகத்தை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம்
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்த, கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி உயர் பெண்கள் பாடசாலையின் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று இலங்கைப் பாராளுமன்றம், கொழும்பு துறைமுக நகரம்,…
தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும்
நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் மீது நிதிக் கொள்கையின் பரிமாற்றம் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்க வீதத்திற்கு ஏற்ப கொள்கை வீதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்….
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றங்களை மீள ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு
அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்(Insulin) மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளது. மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே இன்சுலின் மருந்தை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து, நோயாளர்களின் நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.
இரசாயன தொழிற்சாலையில் தீ; ஒருவர் உயிரிழப்பு
கந்தானை பள்ளிய வீதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பரவிய தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரசாயன தொழிற்சாலையொன்றில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 02 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, குறித்த இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறினால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை…

