உள்ளூர்
வௌிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடு
வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 03 முறைகள் மூலம் இந்த வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையில், வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நிலமற்ற பணியாளர்களுக்கு நகர்ப்புறத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுவது இரண்டாவது முறையாகும்….
லொறி – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாணவன் பலி
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி A9 வீதியின் கைதடி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாட்டு வண்டி சவாரிக்காக கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதான மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியின் டெவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு(12) 10.30…
பஸ்,லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்
பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ், லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். எனினும், ஏனைய வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டுகள், சில காலங்களுக்கு தளர்த்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க…
சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை
நிலவும் வறட்சியுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மேட்டு பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில், 20 மத்திய நிலையங்களில் சுழற்சி முறையில் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது…
நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
நீர்க்கொழும்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்க்கொழும்பு லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல் – உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா அறிவிப்பு (Video)
கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும்அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக்கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது,எனினும் வெளியான தகவல்களை பர்வையிட்டதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனது பாதுகாப்பு…
விளையாட்டுக்கான பல்கலைக்கழகத்தை விரைவில் நிறுவ நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க
விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்து, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகளை அடையாளங் கண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்தத் தேவையான வசதிகளை…
மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – ஐ.நா. அறிக்கையாளர்
இலங்கையின் மலைய தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் தற்காலஅடிமைத்தனம் குறித்த விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். மலையகமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபயணமொன்று ஜூலை மாதம் முதல் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள அவர் மலையக தமிழ் மக்களிற்கு எதிரான திட்டமிடப்பட்ட பாரபட்சத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டு;ம் என இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும்தெரிவித்துள்ளார். மலையகமக்கள் கல்வி கௌவரமான தொழில் போதுமான வீட்டுவசதி நிலம் மற்றும் பொதுவசதிகளை பெறுவதை உறுதி…
கொழும்பை வந்தடைந்தது சீனப் போர்க்கப்பல்
சீனாவின் ‘ ஹாய் யாங் 24 ஹாஓ ‘ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் காணப்படுவதோடு , இக்கப்பலின் கப்டனாக கமாண்டர் ஜின் சின் தலைமை வகிக்கின்றார். நாளை மறுதினம் சனிக்கிழமை இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 40 கைதிகள் மாத்திரமே சிறையில் உள்ளனர்
திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு உள்ளாகியுள்ள வகையில் பணம் செலுத்தி தனியான சிறைச்சாலை அறைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலான நடவடிக்கை அல்ல என்றும் நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். அத்துடன், சிறைச்சாலைகளில் தனியார் தொழிற்சாலைகளை நிறுவி அதில் சிறைக் கைதிகளை தொழில்முயற்சியில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்கு 04 நிறுவனங்கள்…

