உள்ளூர்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இணையவெளி மற்றும் இணைய கொள்கைகளுக்கான தூதுவர் நதானியேல் சி.ஃபிக் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். அவர் கொழும்பில் இணைய பாதுகாப்பு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் சுதந்திரம் தொடர்பான அரச மற்றும் தனியார் துறையினரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். அவர் தனது இலங்கை பயணத்திற்கு முன்னதாக, இன்று வியாழக்கிழமை இந்தியாவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். பெங்களூருவில் நடைபெறும் ஜீ20 டிஜிட்டல் பொருளாதார…
பிரபாகரனின் மனைவி , மகள் உயிருடன் இருக்கின்றனரா?
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அன்டனி ஆகியோரது சடலங்கள் மாத்திரமே இறுதி யுத்தத்தின் போது கண்டு பிடிக்கப்பட்டன. பிரபாகரனின் குடும்பத்தார் தொடர்பான தகவல்கள் எமக்கும் தெரியாது என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. பிரபாகரனின் மனைவியின் சகோதரி எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மற்றும் சார்ள் அன்டனி ஆகியோரின் சடலங்கள்…
உலக சாதனை படைத்த இலங்கை மாணவி
மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி சோழன் உலக சாதனை படைத்த உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட என்ற சாதனையை பொகவந்தலாவையைச் சேர்ந்த பாடசாலை மாணவி 8 வயது கனிஷிகா பெற்றுள்ளார். பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் மகள் கனிஷிகா பொகவந்தலாவை ஹோலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி…
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை பெண்கள் நாட்டை வந்தடைந்தனர்
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 54 வீட்டுப் பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று (16) காலை நாட்டை வந்தடைந்தனர். இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் குறித்த வீட்டுப் பணிப்பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனையோர் பொலன்னறுவை, மொனராகலை, காலி, மாத்தறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தனது பங்கை இலங்கை புதுப்பித்துள்ளது: அமெரிக்க தூதுவர்
இலங்கை மீட்சிக்கான பாதையில் பயணிக்கும் நிலையில், சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கேந்திர நிலையமாக தனது பங்கை புதுப்பித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற இந்தோ-பசுபிக் சுற்றாடல் பாதுகாப்பு மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி, வன பாதுகாப்பு தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரப்பணிப்புடன் செயற்படுவதாக ஜூலி சங் தெரிவித்தார். உலகின் அனைத்து நாடுகளும் வெற்றியையும் ஸ்திரத்தன்மையையும் அடைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என…
இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடல் கண்காணிப்பு விமானம்
இலங்கை விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்றை பதிலீடாக கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று கட்டுநாயக்கவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கக்தினால் ஓராண்டுக்கு முன் நாட்டிற்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல் கண்காணிப்பு விமானம், வருடாந்த கட்டாய பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி…
Shi Yan 6 சீன ஆய்வுக் கப்பல் இலங்கை வருவது உறுதி?
ருஹூணு பல்கலைக்கழகம் மற்றும் நாரா நிறுவனத்தின் அழைப்பிற்கமையவே சீனாவின் யுத்தக் கப்பலொன்று ஒக்டோபரில் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன கப்பலின் வருகையால் மீண்டும் பிராந்தியத்துக்குள் சர்ச்சை ஏற்பட இடமளிக்காமல் , அரசாங்கம் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , சீன ஆராய்ச்சி கப்பலொன்று…
கண்ணிவெடி அகற்றலுக்காக ஜப்பானிடமிருந்து 170 மில்லியன் நிதியுதவி
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 170 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ( MIZUKOSHI Hideaki) தெரிவித்துள்ளார் இந்த வருடத்திற்கான ஜப்பானின் அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள காணிகளை சுத்திகரிக்க எதிர்பார்க்கப்படுவதோடு, இடம்பெயர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்ளை மீள குடியமர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணிவெடியகற்றும்…
இந்திய வைத்தியர்கள் இலங்கையில் வைத்தியசாலைகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பு
இந்திய வைத்தியர்கள் இலங்கையில் வைத்தியசாலைகளை ஆரம்பிப்பதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள வைத்திய நிறுவனமொன்றின் மருத்துவ திட்டமொன்றை ஆரம்பித்து வைத்ததன் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநிலத்தில் கிடைக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதற்காக கொழும்பு தவிர்ந்த ஏனைய நகரங்களிலும்…
அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்து அட்டூழியம்; 6 பேரை தேடும் பொலிஸார்
யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய ஆறு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கல்வியங்காடு – பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் சொத்துகளுக்கு, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்துள்ளனர். குறித்த குழுவில் மூவர் பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் CCTV…

