உள்ளூர்
பாம்பு தீண்டியதில் 56 வயது பெண் பலி
பசறை – கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரிந்த பெண்ணொருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணக்கலை கீழ்பிரிவு தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளியொருவரை கடந்த 16ஆம் திகதி பாம்பு தீண்டியிருந்தது. குறித்த பெண் சிகிச்சைகளுக்காக பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 56 வயதான கந்தன் முத்துலட்சுமி நேற்று முன்தினம்(18) வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்…
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தெஹிவளை Oban ஒழுங்கையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்றிரவு(19) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர். வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாளை சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் (Ng Eng Hen), நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் (Grace FU Hai yien) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். பெரிஸ் உடன்படிக்கையின் 6ஆவது உறுப்புரை, சர்வதேச கார்பன் வர்த்தகத்தின்…
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு ; ஜனாதிபதி
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு கொள்கைகளை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பூஸ்ஸ உயர் கடற்படை பயிற்சி முகாமில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனை கூறினார்.
சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தம்
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருதய பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தொழிலுக்காக வௌிநாடு சென்றமையால் இந்த நிலை தோன்றியுள்ளது. இதன் காரணமாக சிறுவர்களுக்கான இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகக் குழு தெரிவித்தது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுவர் இருதய அறுவை சிகிச்சையை அவர் மாத்திரமே மேற்கொண்டதாகவும் அவருடைய வெற்றிடத்தினை பூர்த்தி…
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வு : மு.க.ஸ்டாலின்
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வாக அமையும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் – மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொரு தடவையும் தாம் பிரதமர் மோடியை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனவும் கச்சதீவை…
கனடா – இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமனம்
இலங்கையை மீண்டும் சுபீட்சமான பொருளாதார வளமிக்க நாடாக மாற்றுவதை நோக்காக் கொண்டு கனடாவிலுள்ள முதலீட்டாளர்களை இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால், கனடா – இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமிக்கப்பட்டார். இந்த நியமன வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை (18) கொழும்பிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது .
வியட்நாம் – இலங்கைக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை
ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வியட்நாம் நாட்டின் துணை ஜனாதிபதி ட்ரான் லு குவாங்கிற்கும் இடையே நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (16) சீனாவில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது. அரச மற்றும் தனியார் துறைகளில் தற்போதுள்ள கூட்டு முயற்சிகளுக்கு மேலதிகமாக புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளை ஆராயுமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு வியட்நாம் துணை ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். வியட்நாம் நாட்டின் முதலீடுகளின் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை…
இடமாற்றத்தைப் பொருட்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடை நிறுத்தப்படும் – கல்வி அமைச்சு
இடமாற்றத்துக்கான அறிவித்தல்களை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கமைய பணியாற்றாத் தவறும் ஆசிரியர்களின் சம்பளம் இடை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்டு;ள்ள ஆசிரியர்களுக்கு அதற்கேற்ப பணியாற்றுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , எனினும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் முன்பிருந்த பாடசாலைகளிலே பணியாற்றுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை நிமித்தம் அதிபர்களின் கோரிக்கைக்கு அமைய அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாபவும் ,…
‘G77 Plus China’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதிக்கு அழைப்பு
கியூபாவில் செப்டெம்பர் மாதம் கியூபாவில் நடைபெறவுள்ள ஜீ 77 சீன உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரெஸ் மார்செலோ கோன்சாலஸினால், கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெலின் அழைப்புக் கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கியூபாவின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘அபிவிருத்தியின் தற்போதைய சவால்கள்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு’ என்ற தொனிப்பொருளில் செப்டெம்பர் 15 மற்றும்…

