உள்ளூர்
திருகோணலையில் இறங்குதுறை இடிந்து விபத்து
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட குழுவொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்கள் குழுவும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்புத்தளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
அப்புத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு – அப்புத்தளை பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலரை மீள செலுத்திய இலங்கை
பங்களாதேஷினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாற்ற வசதியில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மீள செலுத்தியுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் தவணைக் கொடுப்பனவாக கடந்த 17 ஆம் திகதி குறித்த நிதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஊடகப் பேச்சாளர் மெஸ்பவுல் ஹக்கை (Mezbaul Haque) மேற்கோள் காட்டி பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதன் காரணமாக தமது நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பு உயர்வடைந்துள்ளதாக பங்களாதேஷ்…
காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச்செல்ல தற்காலிகத் தடை
காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகளை வெளியே அழைத்துச்செல்ல இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளிடையே பரவும் காய்ச்சல், தோல் தொற்றுநோய் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையில், சிறைக்கைதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். காலி சிறைச்சாலையில் இரண்டு சிறைக்கைதிகள் உயிரிழந்தமை, சிறைச்சாலையில் இந்நாட்களில் பரவிவரும் நோய் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட வைத்தியர்கள் குழாமொன்று சிறைச்சாலைக்கு இன்று சென்றிருந்தது. தோலில் தொற்று…
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்?
இந்திய கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்காட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கில் 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கியதாக சன் செய்தி வௌியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கொள்ளையர்கள் தங்களைத் தாக்கி, வலைகளை எடுத்துச்சென்றதாக மீனவர்கள்…
சீனாவிடமிருந்து இராணுவத்துக்கு அதிநவீன தகவல் தொடர்பாடல் வசதிகள் கொண்ட வாகனங்கள்
சீனாவுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கடந்த 2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கமைய , சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக இன்று (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது. 45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன்…
சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு
ங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ பேச்சுக்களை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் தலைவர்கள் அவதானம் செலுத்தியிருந்ததோடு, பரந்த பொருளாதார…
அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் பணி நீக்கம்
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது. அத்துடன், குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியுள்ளது. மாத்தளை, ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் தற்காலிக குடியிருப்பை உதவி முகாமையாளர் ஒருவர் அடித்து நொறுக்கும் காட்சி மலையக மக்கள்…
சூரிய மின் உற்பத்தி தொடர்பில் முன்னணி இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சுரானா குழுமத்துடன் , இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார். குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதற்கு பொறுத்தமான இடங்களை…
வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகள் நியமனம்
வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அந்த பிரதிநிதிகள் ஊடாக இலங்கைக்கு முதலீடுகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். வௌிநாடுகளில் பணிபுரியும் அல்லது சுயதொழில் புரியும் இலங்கையர்களை முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கனடாவிலுள்ள முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கான பிரதிநிதியாக கனடா – இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர் குலா செல்லத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

