உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே நிலையான சமாதானத்தை அடைவதற்கான வழி ; அமெரிக்கா

இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்தகால வடுக்களை ஆற்றுவதற்கும், நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.  இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான நேற்று புதன்கிழமை (30) கொழும்பில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோர்…

Read More

சார்க் ஊடகவியலாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ கருத்தரங்கு

சார்க் ஊடகவியலாளர்கள் மன்றத்தின் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில் யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது. சார்க் ஊடக அமைப்பின் இலங்கைக்கான பொருளாலர் வீரகேசரி நாளிதழின் உதவி செய்தி ஆசிரியருமான திரு.எஸ்.லியோ நிரோஷ தர்ஷன் மற்றும் கல்லூரி அதிபர் திருமதி.சூரியராசா , உள்ளிட்டவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய கல்லூரி அதிபர் திருமதி.சூரியராசா , இன்றைய சமூகத்தில் இளம்…

Read More

காணாமல்போன 10 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர் : ஆனால் விபரங்கள் இல்லை ?

காணாமல்போன பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை. என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வவுனியாவில் அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை இன்று நாம் நினைவுகூருகிறோம். சுமார் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்…

Read More

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தில் யாழிலும் ஆர்ப்பாட்டம்  

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமான இன்று (30) காலை யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை முன்னெடுத்தனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றது. யாழ். பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இப்போராட்டம் அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாண நகரைச் சுற்றி, யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடி வரை சென்று நிறைவு பெற்றது.

Read More

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐ.நாவின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸிடம் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸ் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு முக்கிய தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றார். அந்த வகையில் மார்க்-அன்ட்ரூ…

Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் – ஐ.நா. வலியுறுத்தல்

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை ; முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் -தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது…

Read More

பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு  பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரக்ஞானந்தாவினால் தேசத்திற்கு பெருமை கிடைத்துள்ளதாகவும் இதுவொரு சிறிய சாதனை அல்லவெனவும் எதிர்வரும் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்வதற்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 18 வயதான கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து ஒவ்வொரு இந்தியரின்…

Read More

இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி…

Read More

புதிய தூதுவர்களால் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்கான  புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இத்தாலி  மற்றும் ஜேர்மன்  ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய தூதுவர்களும், பிரித்தானிய மற்றும் வட அயர்லாந்துக்கான புதிய உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். பிரித்தானிய மற்றும் வட அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகராக ஆண்ட்ரூ பெட்ரிக் , ஜேர்மனுக்கான தூதுவராக கலாநிதி பெலிக்ஸ் நியூமன் , இத்தாலிக்கான தூதுவராக டாமியானோ பிரான்கோவிக் ஆகியோர்…

Read More

பொது பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது ஆதரவளித்தால், அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்களைத் தூண்டும் வகையில் மக்கள் பிரதிநிதியொருவர் பொறுப்பற்ற முறையில் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில்…

Read More