உள்ளூர்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எனவே செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக காணாமல்போன தமது…
மண்மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் பலி!
நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. குறித்த மண்மேடு அகற்றப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி, வெரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
13ஆவது திருத்தம், அதிகாரப்பகிர்வு விடயங்கள் காலதாமதமாகுமாம்
13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தல், மற்றும் அதிகாரப்பகிர்வு விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் காலதமாதமாகும் என்று அரச உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, செப்டெம்பர் மாத ஐ.நா.கூட்டத்தொடர் மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கொடுப்பனவுக்கான மீளாய்வு உள்ளிட்ட விடயங்கள் நிறைவுற்றதன் பின்னரேயே இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினர்…
வடக்கில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம்
இலங்கையின் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம், வட மாகாணத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (02) காலை இடம்பெற்றது. சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் தெங்கு முக்கோண வலயம் அறிமுகம் செய்யப்பட்டது. மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை ஆகிய மாவட்டங்களை இணைத்து இந்த புதிய தெங்கு முக்கோண வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்போது தென்னை வளர்ப்பாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் அமைச்சர் ராமேஸ் பத்திரன தென்னங்கன்றுநாட்டினார். இந்நிகழ்வில் அமைச்சர் ராமேஸ்…
யாழில் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம், பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கம், அனலைத்தீவு கடற்றொழிலாளர் சங்கம், நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கம், இன்பற்றி கடற்றொழிலாளர் சங்கம் நயினா தீவு , பாசையூர் கடற்றொழிலாளர் சங்கங்கள் உள்ளிட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து, தமது கோரிக்கைகள்…
கொழும்பு துறைமுகத்தில் இந்திய யுத்த கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.டில்லி என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை கொழும்துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் 163.2 மீற்றர் நீளம் கொண்டதாகும். இக்கப்பலின் கப்டன் அபிஷேக் குமார் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கும் இக்கப்பலை பார்வையிட வாய்ப்பளிக்கப்படவுள்ளது….
சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் தெரிவு
இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சீனரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர்களது குடும்பம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து, நான்கு தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். தர்மன் சண்முகரத்தினம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல்…
கச்சத்தீவு மீட்பு விவகாரம் ; நீதிமன்றம் தலையிட முடியாது என அறிவிப்பு
கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, தலைமை நீதிபதி இதனை அறிவித்து வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. 1974-இல் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில்…
அமெரிக்க தூதுவருக்கு எதிராக முறைப்பாடு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung, வியானா உடன்படிக்கையின் இராஜதந்திர எல்லைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சிடம் கடிதமொன்றை இன்று கையளித்தனர். 66 அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டதாக கூறப்படும் இந்த கடிதத்தின் பிரதியை தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று கையளித்தனர். வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதியொருவர் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை தொல்பொருள் திணைக்களம் மதித்து நடக்கவில்லை – முல்லைத்தீவு நீதிமன்றம்
குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று வியாழக்கிழமை (31) திகதி யிடப்பட்டிருந்தது. அந்த வகையிலே இன்றைய தினம் (31) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18…

