உள்ளூர்
லசந்தவை கொலை செய்த கொலையாளி பாராளுமன்றத்தில் இருக்கின்றாரா ? ; சஜித் கேள்வி
சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி பாராளுமன்றத்தில் இருக்கின்றாரா? இது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் மிகவும் பக்க பலமாக இருந்தவரே லசந்த விக்கிரமதுங்க, இதனால் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை…
ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை : சபையில் ஜனாதிபதி உறுதி
உள்நாட்டு அரசிறை திருத்த சட்டமூலத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அதனால் உண்ணாட்டரசிறை திருத்த சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள ஒத்துழைப்பு வழங்குங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) உண்ணாட்டரசிறை சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சியினர் தெரிவித்துவந்த கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உள்நாட்டு அரசிறை திருத்த சட்டமூலத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு நூற்றுக்கு…
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : அனைவரையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்துமாறு வலியுறுத்தல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியினது கையின் ஒரு பகுதி அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் சத்திய மூர்த்தியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீ தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் ; அரசாங்க அதிபர் குழாம்நேரடி கள விஜயம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி காணப்படும் சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தனர். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தீர்மானிக்கப்பட்டதற்கமைய, இன்று புதன்கிழமை (06) காலை 8 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள்…
மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க தீர்மானம்
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலக மட்டத்தில் முறைப்பாடுகள் விசாரணைக்குட்படுத்தப்படும் என ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சிலவற்றை வேறு நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தொழில் திணைக்களம்,…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : செனல் 4வின் முக்கிய வெளிக்கொணர்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி நேற்று (05) வௌியிட்ட நிகழ்ச்சியில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று வலியுறுத்தியுள்ளார். தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள், இதுவரை சரியாக ஆராயப்படாத உண்மைகள் தொடர்பாக பக்கசார்பற்ற, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பரந்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, Channel 4 தொலைக்காட்சி, ராஜபக்ஸ…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ஸக்களுக்கு தேவையற்றது: மஹிந்தானந்த அளுத்கமகே
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ஸக்களுக்கு தேவையற்றது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று ( 05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Channel 4 தொலைக்காட்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று இரவு வௌியிடவுள்ள ஆவணம் குறித்தே அவர் இதனை தெரிவித்தார். Dispatches நிகழ்ச்சியின் கீழ் பிரித்தானிய நேரப்படி இன்றிரவு ஔிபரப்பாகவுள்ள ஆவணத்தின் முன்னோட்டத்தை Channel 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி…
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தற்போது கோரப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜீ.விஜேசூரிய கூறினார். யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுமிக்கு…
விகாரை நிர்மாணிப்புக்கு எதிராக திருமலையில் போராட்டம்
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்க்கும் வகையில், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே”…
மத ரீதியில் இனப்பிரச்சினையை தீவிரப்படுத்த முயற்சி : அழுத்தத்தைப் பிரயோகிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தல்
தமிழர் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், எனவே இலங்கைக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதை விடுத்து, இம்முறை கூட்டத்தொடரில் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம்…

