உள்ளூர்
கணிதப் பிரிவில் சிறந்த சித்திபெற்ற மாணவன் மாரடைப்பால் திடீர் மரணம் !
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் (2022ஆம் கல்வியாண்டு) அடிப்படையில் கணிதப்பிரிவில் சிறந்த சித்தியைப் பெற்ற மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று வல்லவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. வல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோராய ரணவன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஆர்.ஜி.மனுஜய ஹன்ஸ்மல் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (7) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவன் இரண்டாவது முறையாக கணிதப்…
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய 6 பேர் கைது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றில் இரும்பு திருட முற்பட்ட குற்றச்சாட்டில் 06 பேர் காங்கேசன்துறை பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகள் கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட நிலையில் கடந்த யூலை மாதம் முதல் வாரத்தில் இராணுவத்தினர்…
யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கும் கும்பல் : தனியார் வைத்தியசாலை பெண் பணியாளர் உள்ளிட்ட நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் பதின்ம வயது இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வரும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும்…
உயிர்த்த ஞாயிறு விசாரணையை ஷானியிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை
தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று (08) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். சமகாலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் ஊடகங்கள்,அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டைப் பேணுவது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறே…
கிளிநொச்சியில் தீக்கிரையான தொழிற்சாலை!
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்திஅக்றோ தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (08) நண்பகல் வேளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த தும்புத் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளதுடன், தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும், அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர்,…
இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை?
செனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம். அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கதக்கது. சனல்…
அமைச்சர் கெஹெலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தோல்வி
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேணை மீதான வாக்கெடுப்பு இன்று (08) மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நம்பிக்கையில்லா பிரேணை மீதான விவாதம் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று, தமது கருத்துகளை முன்வைத்திருந்தனர். ஐக்கிய மக்கள் சக்தியினரால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.
Channel 4வின் குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ஸ பதில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 தொலைக்காட்சி வௌியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். “இலங்கை தொடர்பான Channel 4 அலைவரிசையின் புதிய திரைப்படம்” எனும் தொனிப்பொருளில் 4 பக்க நீண்ட அறிக்கை அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் வௌியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையில் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். Channel 4 இன்…
‘சனல் 4 ‘ செய்திச் சேவையின் காணொளி : பேராயரின் விசேட கோரிக்கை
பிரித்தானியாவின் ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். இந்த விசாரணை சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற…
தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் பதவியிலிருந்து சுரேஸ் சாலேயை பதவி நீக்கவேண்டும் – விஜித ஹேரத்
தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் சுரேஸ் சாலேயை உடனடியாக பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி பிள்ளையானிற்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே தேசிய மக்கள் சக்தி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. செய்தியாளர் மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநராக சுரேஸ் சாலே தொடர்ந்தும் பணியாற்றும்…

