உள்ளூர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு நாட்டிற்கு வருகை
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர். இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு அதிகாரிகளை தௌிவுபடுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கப்பல் விபத்து மற்றும் கடலோர குழாய் அமைப்புகளில் காணப்படும் கோளாறுகள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுத்தல், கப்பல் விபத்துகள் ஏற்பட்டால் அதன்…
பாரிய சைபர் தாக்குதல்: பல அரச நிறுவனங்களின் தரவுகள் அற்றுப்போகும் அபாயம்
பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது. இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே இந்த தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்…
போலி இணையத்தளத்தினூடாக இடம்பெற்ற நிதி மோசடி குறித்து அம்பலம்
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப உதவிப் பணிப்பாளர் காயத்ரி பெர்னாண்டோ தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் குறித்து 1950 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனை தவிர, 0112 542 104, 0112 334 728 மற்றும் 0112…
குற்றவாளிகளை மன்னிக்கத் தயார் ; ஆனால் மக்களை பழிவாங்க இடமளியோம் – பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் காணப்பட்டது அடிப்படைவாத குழுவல்ல. அதனை விட பாரிய சூத்திரதாரிகள் இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளனர் என்பது இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படக் கூடியவாறு நேர்மையானதும் , வெளிப்படையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் வலியுறுத்துவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அத்தோடு இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்ட நபர்களை தமது குற்றங்களை ஏற்றுக் கொண்டால் அவர்களை மன்னிப்பதற்கு தயாராக இருப்பதாகவும்…
186 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட 33வது ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட186 தமிழர்களின் 33வது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (09) மலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்குக்கு முன்பு ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மலர்தூபி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 09ஆம் திகதி சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி பகுதிகளைச் சேர்ந்த 186 தமிழர்கள் பாதுகாப்புத் படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு கொலை…
தொற்று நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சுகாதார பூச்சியியல் அலுவலர்களின் பற்றாக்குறையால் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம் சுமார் 120 சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பதவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலைமை இருந்தும் இவ்வருடம் மாத்திரம் சுமார் பத்து சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அவர்களில் சிலர் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சிலர் வேலைகளை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,…
ஊழல் ஒழிப்பு சட்டம் 15ஆம் திகதி முதல் அமுல் : வெளியானது விசேட வர்த்தமானி
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி , சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டு;ள்ளது. 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் முதலாம் பிரிவின் 2ஆம் உப பிரிவினால் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் திகதியாக 15ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குற்றச்…
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை வலியுறுத்தல்
பொருளாதார மீட்சி மற்றும் சுபீட்சம் எனும் நிலைமாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கைத்தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதத்தினால் கடந்த செவ்வாய்கிழமை ப்ருசேல்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் ‘இலங்கையின் நண்பர்கள்’ குழுவின் தலைவர் தோமஸ் டெகோவ்ஸ்கி மற்றும் பிரதித்தலைவர் மெக்ஸிமிலியன் ரா ஆகியோர் உள்ளடங்கலாக அக்குழுவில் அங்கம்வகிக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற…
Channel 4வின் காணொளி : பாதுகாப்பு அமைச்சின் பதில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 இன் பொய்யான குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : உலகையே உலுக்கிய கொடூரமான, இரக்கமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுத்து – 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்-குழந்தைகள் மற்றும்வெளிநாட்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.இந்த பேரழிவை அடுத்து, இலங்கை அரசாங்கம்,…
நல்லிணக்க செயன்முறையின் அடிப்படை பொறுப்புக்கூறலேயாகும் – ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டு
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியல்தீர்வை வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதியினால் சகல தரப்பினருடனும் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் வரவேற்கத்தக்கவையாகும். இருப்பினும் நல்லிணக்கத்தை நோக்கிய எந்தவொரு நியாயமான செயன்முறையினதும் முக்கிய கூறாக பொறுப்புக்கூறலே காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம்,…

