உள்ளூர்
பிரதமரை சந்தித்த பிரபுதேவா!
திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதால் சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா
உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார். அதன்படி நேற்று முன்தினம்…
தாவடியில் பெற்றோல் குண்டு தாக்குதல் ; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
தாவடி வன்னிய சிங்கம் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவன் , குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டிலுள்ளள்ள யுவதியைக் காதலித்ததாகவும் அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில் , இவ்வாறு அவரால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில்…
‘ஷி யான் 6’ சீனக்கப்பலின் வருகைக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை – வெளிவிவகார அமைச்சர்
சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ இன் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், இவ்விடயங்கள் இராஜதந்திர ரீதியிலேயே கையாளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ இன் வருகையுடன் தொடர்புடைய விவகாரங்களில் தாம் (வெளிவிவகார அமைச்சு) நேரடியாகத் தொடர்புபடவில்லை என்று குறிப்பிட்ட அவர், அக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அதேவேளை, ‘ஷி யான் 6’ கப்பலின் வருகை…
933 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
933 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 926 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 25 ஆவது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
IMF பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை(14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?
தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர்…
மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி
இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, “மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு…
ஜெனிவாவில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து அவதானம்
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து, அதன் பிரதி உயர்ஸ்தானிகர் நாதா அல் நஷீப் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு…
IMF உடனான பேச்சுவார்த்தைக்கான அனைத்து செயற்பாடுகளும் தயார் – நிதி இராஜாங்க அமைச்சர்
சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

