உள்ளூர்
ஜனாதிபதி ரணில் சமந்தா பவருக்கிடையில் விசேட சந்திப்பு
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர்(Samantha Power) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க் சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமூகமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் உள்ள…
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக்…
கொழும்பில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை
கொழும்பு மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (19) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மருதானை பிரதேசத்தில் நினைவேந்தல்களை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை மற்றும் மருதானை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்’ என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று செவ்வாய்கிழமை பி.ப 3.00 மணிக்கு மருதானையில்…
கையை இழந்த வைசாலி மீண்டும் பாடசாலைக்கு!
யாழ். போதான வைத்தியசாலை விடுதி இல.12 மருத்துவர்கள் மற்றும் தாதியர் ஆகியோரின் அசண்டையீனம் மற்றும் கவனக்குறைவினால் தனது கையினை இழந்த யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று (19) மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்தார். இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள். வைசாலி கற்றலைத் தொடர்வதற்கும் அவர் பாடசாலைச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கோட்டாவைப் போன்று ரணிலும் உண்மையை மறைக்கிறார் – சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்படாத வரை நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையிலேயே காணப்படும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உண்மைகளை மறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத் தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும். அரசாங்கம்…
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு 1591 வீடுகள்
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார். மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்…
சட்டவிரோதமான முறையில் வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900 ஆகக் காணப்பட்டது. சட்டவிரோதமாக வௌிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன பொதுமக்களுக்கு ஆலோசனை…
நல்லூரில் இரண்டரை வயதுச் சிறுமி மாயம்
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன இரண்டரை வயதுச் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடிவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி காணாமல் போனமை தொடர்பில் அவரது தாயார் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, தனது தாய், பாட்டி மற்றும் ஒரு வயதுடைய சகோதரனுடன் கடந்த 6ஆம் திகதி நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ளார்….
உலகளாவிய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளினால் கூடுதல் பங்களிக்க முடியும்
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான “G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸ் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியதுடன், மாநாடு தொடங்கும் முன், இதில் பங்கேற்ற அனைத்து…
ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்றும், நிதியத்திற்குச் சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின்னர் கிடைக்கும் இலாபத்திற்கு நூற்றுக்கு 14 சதவீதமாக மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

