எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் – சரத் பொன்சேக்கா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவம் தொடர்பில் அடிப்படை அறிவு கூட இல்லை. அதன் காரணமாகவே அவர் எனக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் நிலையை விமர்சிக்கின்றார்.  எனக்கு என்றாவது ஒரு நாள் அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் எனக்கும், சிறானி பண்டாரநாயக்கவுக்கும்…

Read More

மாஹோ – அநுராதபுரம் ரயில் பாதை அபிவிருத்திக்கான ஒப்பந்தம் கைசாத்து

இலங்கை புகையிரத சேவையின் மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான (66 கிமீ) ரயில் பாதையின் சமிக்கை தொகுதியினை வடிவமைத்தல், பொருத்துதல், பரிசோதித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைசர் பந்துல குணவர்த்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.  318 மில்லியன் டொலர் இந்திய…

Read More

நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கப்பல் போக்குவரத்தினைத் தொடங்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாகப்பட்டினம்…

Read More

ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் António Guterres-இற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐ.நா பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.00 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்து,  நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச்செல்வதே தமது நோக்கம் என இதன்போது அவர் தெரிவித்தார்….

Read More

நாட்டின் பணவீக்கம் 2.1% ஆக வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில் கடந்த மாதத்தில் பணவீக்கம் 2.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 வீதமாகக் காணப்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் -2.5 வீதமாகக் காணப்பட்ட இலங்கையின் உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் -5.4 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இதேவேளை, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வலுவான வேலைத்திட்டத்தின் காரணமாக  பணவீக்கம் 62.1 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித்…

Read More

கனேடியர்களுக்கான விசாக்களை இடைநிறுத்தியது இந்தியா

கனேடிய பிரஜைகளுக்கான விசாக்களை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. விசா வழங்கும் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதால், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு எவரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிணக்குகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  செயற்பாட்டுக் காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக விசா சேவைகளை வழங்கும் BLS-இன் இந்தியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது.  சீக்கிய பிரிவினைவாத தலைவரின் கொலையுடன் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை…

Read More

மட்டக்களப்பு, உறுகாமம் கிராமத்தில் யானைகள் அட்டகாசம் : அச்சத்தில் வாழிடங்களை விட்டு வெளியேறும் மக்கள்! 

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை 1.30 மணியளவில் காட்டு யானைகள் அங்கிருந்த மின்சார வேலிகளை உடைத்துவிட்டு, ஊருக்குள் நுழைந்து அங்குள்ள வாழை, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயன்தரும் பயிர் வகைகளை அழித்து சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள், தோட்டங்கள், மின்சார கம்பங்களும் நாசமாகியுள்ளன. வீடுகளையும் பயிர்ச் செய்கையையும் காட்டு யானைகள் அழித்து நாசமாக்கியுள்ளதுடன், மக்கள் மயிரிழையில் உயர் தப்பி காயங்களுடன்…

Read More

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றத்தால் தள்ளுபடி

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் திங்கட்கிழமை (18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின்…

Read More

திலீபனின் நினைவேந்தல் ஊடாக தமிழ் – சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி – தயாசிறி

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகிறது.இந்த சம்பவத்தின் ஊடாக தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது. ஆகவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More

பெட்டிக்கலோ கெம்பஸ் விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (20) நேரிடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார். கெம்பஸை பொறுப்பேக்கும் நிகழ்வில்…

Read More