உள்ளூர்
நஷ்டத்தை ஈடு செய்யும் வரை சிரமங்களுக்கு மத்தியிலும் சுமையை ஏற்க வேண்டும் – அரசாங்கம்
இலங்கை மின்சாரசபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வரை, குறுகிய காலத்துக்கு தற்காலிகமாக மின் கட்டண சுமையை சுமக்க நேரிடும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவையில் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய இடைவெளியை நிரப்பும் வகையில் விலை சூத்திரத்தை தயாரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனவே சிரமத்துக்கு மத்தியிலேனும் இவற்றை…
ரயிலுக்காக காத்திருந்தவர் திடீர் மரணம்
ரயிலில் பயணிப்பதற்காக ஹட்டன் புகையிரத நிலையத்தில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மஸ்கெலியா, நல்லதண்ணி பகுதியைச் சேர்ந்த சுமார் 70 வயதுடைய பி.எஸ். ஆறுமுகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரயில் வரும் வரை பயணிகள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உயிரிழந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் அவதானித்து வருகின்றோம் ; ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பில் Google, Meta (Facebook, Instagram, WhatsApp, Threads), Amazon, Apple, Booking.com, Expedia Group, Goto, Grab, Line, LinkedIn, Rakuten, Spotify, Snap, Shopify, X (Twitter) மற்றும் Yahoo…
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சற்றுமுன் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இந்த பின்புலத்தில்தான் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசின் பொருளாதாரக் கொள்கைகள் தவறு
– அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவதனாம் செலுத்தி இரு தரப்பினரும்…
நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் பிரதம நீதியரசர் தெரிவிப்பு
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌவல்ய நவரத்ன தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.தவபாலன் ஆகியோருக்கும், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்…
சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் ?- சர்வதேச ஊடகவியலாளரிடம் ரணில் கேள்வி
சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர்…
முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை
முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில் நேற்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் அம்பாறையை சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு…
வீட்டிலிருந்தே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி – கனக ஹேரத்
அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தல் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்தப் பொறிமுறையின் ஊடாக வீட்டிலிருந்தவாறே மக்களுக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத்…
சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை – சம்பந்தன்
நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார். நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டால் நாட்டின் நல்லாட்சி, ஜனநாயகம் சீர்குலைந்து சர்வதேசத்தால் ஒதுக்கப்படும் நிலைமை உருவாகும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயற்பட வேண்டமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல், அழுத்தங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கும்போதே…

