கொள்ளுபிட்டி விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவர் பலி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஐவரே தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து காரணமாக பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் விமானப்படையினரும் ஈடுபட்டு வந்தனர். இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி…

Read More

அபுஹிந் தொடர்பான தகவல்களை வெளியிடத் தயார் – ஹரீஸ் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையோ நம்பகத்தகுந்த விசாரணை ஒன்றோ இடம்பெறுமாக இருந்தால் தாக்குதலின் சூத்திரதாரியான அபுஹிந் தொடர்பான தகவல்களை வெளியிட நான் தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த சபையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு…

Read More

சீன கப்பலுடன் ஆராய்ச்சி தொடர்பில் எந்த உடன்படிக்கையும் இல்லை – ருகுணு பல்கலைகழகம்

சிஎஸ்எல்  – சிஈஆர் இன் இணை இயக்குநர் டிஸ்னா ரட்நாணயக்க இதனை தெரிவித்துள்ளார். பல்கலைகழகம் சீன அரசாங்கத்துடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 இல் இலங்கையில் சி யான் 3 ஆராய்ச்சிதொடர்பான ஒத்துழைப்பில் ஈடுபட்டதன் பின்னர் பல்கலைகழகம் சீன அரசாங்கத்துடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை  என அவர் தெரிவித்துள்ளார். பல்கலைகழகத்தின் சர்வதேச விவகாரங்களிற்கான நிலையத்திடமோ  அல்லது துணைவேந்தரிடமோ எந்த தரப்பும் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சி கப்பலுடன்  உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும் என எந்த தரப்பும்…

Read More

மீரிகம – நீர்கொழும்பு வீதியில் விபத்து ; சாரதி உயிரிழப்பு

மீரிகம – நீர்கொழும்பு வீதியில், கொட்டதெனிய, வெலிஹிந்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பஸ் சாரதி துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இன்று வெள்ளிக்கிழமை (06) காலை மணல் ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் தனியார் பஸ்  ஒன்று மோதி விபத்துள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் லொறி மற்றும் பஸ் ஆகியவற்றின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளன.

Read More

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ; யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண மாவட்டத்திலே காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற வகையில்மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இதன்போது மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். குறித்த போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய…

Read More

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜினாமா

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் இன்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 14 மாதங்களுக்கு முன்னர் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் பதவியை ஏற்ற தனது அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தனது செய்தியில்…

Read More

கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைச் சூத்திரம் அவசியம் – அரசாங்க நிதி பற்றிய குழு

இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ. த சில்வா கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார். கோதுமை மாவுக்கு விலைச்சூத்திரமொன்றைப் பேணிவந்தால் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியவாறு விலைகளைத் தீர்மானிப்பதற்கு இடமளிக்காமல் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய…

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இன்று திருத்தம் !

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை (4) மீண்டும் திருத்தப்படவுள்ளது. கடந்த தடவை, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 3,127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, தற்போது 1,256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.  2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 587 ரூபாவாகவிற்கு விற்கப்படுகின்றது. இந்தநிலையில் லிட்ரோ…

Read More

சீனாவை போன்று சமூக வலைத்தள பாவனையை தடைசெய்ய மாட்டோம் – அரசாங்கம் தெரிவிப்பு

சீனாவைப் போன்று சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பது எமது இலக்கல்ல. போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்புவதன் ஊடாக இன, மத மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தின் ஊடாக சமூக வலைத்தள ஊடகங்களை முடக்க எதிர்பார்க்கவில்லை….

Read More

நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை முன்வைத்துள்ள மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் வாஷிங்டனிலுள்ள தலைமை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பீடுகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கடன் தொகை தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , மரணத்தின் விளிம்பில் இருந்த பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின்…

Read More