உள்ளூர்
வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான யுத்தம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் வலியுறுத்தியுள்ளது. லெபனான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள நஹாரியா, அக்கோ, ஹைஃபா, திபெரியாஸ் மற்றும் நசரேத் நகரங்கள் தற்போது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், மேற்குறிப்பிட்ட வடக்கு நகரங்களில் உள்ள இலங்கையர்கள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட…
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!
நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் பங்களிப்புடன் இன்று புதன்கிழமை (11) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாதமை குறித்து தாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தலை பிற்போடும் நோக்கில் அமைச்சரவை பத்திரம் ; ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை
பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் நோக்கத்துடன் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அந்த கட்சியின் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவையில்…
காஸாவில் இலங்கையர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் மாயம்
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நிமல் பண்டார, “தென் பிராந்தியத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின்…
எனது புகைப்படங்களை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி ரணில்
தனது புகைப்படங்களை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் இனிமேல் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பொறிப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ள ஜனாதிபதி கட்அவுட் மற்றும் அரசியல் கோசங்களில் இருந்து விலகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இன்று (08) மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு …
இன, மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் – ஜனாதிபதி
இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வேறுபாடுகளை முன்நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா…
கொழும்பில் நாளை நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை (07) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (07) மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 8 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் கொழும்பு…
நஸீர் அஹமட்டை நீக்கிய தீர்மானம் சட்டபூர்வமானது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தனது கட்சி உறுப்புரிமையை பறித்தமைக்கு எதிராக நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என்ற உத்தரவை இன்று (06) அறிவித்தது.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான விருந்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் எஹதுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய, அம்போகம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. மதுபான விருந்து நடந்த வீட்டின் உரிமையாளர், வீட்டின் முன் வசிப்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

