உள்ளூர்
தொற்றுநோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த விசேட குழுக்கள் – PHI
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஏற்படும் தொற்றுநோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகசங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை நாளை
வெள்ள நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகளின் இரண்டாம் தவணை பரீட்சை நாளை (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். வெள்ளம் வடியாத பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் மாத்திரம் நிலைமை தணிந்த பின்னர் தவணை பரீட்சை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கையிருப்பை பாதுகாக்க அரசாங்கம் அவதானம்
காஸா பகுதியில் இடம்பெற்றுவரும் போரால் உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியதன் காரணமாக, இந்த நாட்டில் எரிபொருள் கையிருப்புக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பில் அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், இதன்படி தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை சிறப்பான முகாமைத்துவ முறைக்கு கீழ்ப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய…
பலத்த மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவளை நகரம்!
பண்டாரவளையில் இன்று (15) பெய்த பலத்த மழையினால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பண்டாரவளை விஹாரைக்கு முன்பாக கொழும்பு – பதுளை பிரதான வீதியும் தடைப்பட்டுள்ளதுடன், வீதியில் சுமார் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் நிரம்பியுள்ளது. இதனால் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து வீடுகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
ஜனாதிபதி ரணில் இன்றிரவு சீனா பயணம் ! ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு !
சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை (16) முதல் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு…
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம் !
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன் மீது மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று வெள்ளிக்கிழமை (13) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தியா – இலங்கைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார் இந்தியப் பிரதமர்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை முறைமுகத்திற்கு இன்று சனிக்கிழமை (14) முதல் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலானது, 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்டதோடு மணித்தியாலத்திற்கு 36 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும். இந்த பயணிகள் கப்பலுக்கு “செரியபாணி” என்ற பெயர் சூட்டப்பட்டது. அதில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன. 14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும்…
இலங்கை விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இணையனுசரணை நாடுகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படுமென பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற…
சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இரு இலங்கையர்கள் கைது
இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் செல்ல முயன்ற போது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெற ஒத்துழைக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்க கோரிக்கை
நீதிபதி.ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உட்பட வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஹர்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போரளிகள் உள்ளிட்ட தரப்புக்களே…

