இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் எமது நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் – சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

இஸ்ரேல், பாலஸ்தீன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் காலங்களில் அரசியல், பொருளாதார ரீதியில் எமது நாட்டுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற கோபா குழுவின் 100ஆவது ஆண்டு நிறைவு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இஸ்ரேல்,  பாலஸ்தீன போர் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்…

Read More

இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து

இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் சிரேஷ்ட உதவித் தலைவரும் ஹுவாவி ஆசிய – பசுபிக் வலயத் தலைவருமான சைமன் லீன் (Simon Lin) தெரிவித்தார். தமது நிறுவனம் தற்போதும் இலங்கைக்குள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் அதேநேரம், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்க ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள…

Read More

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு

இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். “ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (17) காலை பீஜிங்கில் இடம்பெற்றதுடன் இது தொடர்பில் இருநாட்டுத்தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர். அண்மைய பொருளாதார நெருக்கடி மற்றும்…

Read More

நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை’ என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்  இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சுரேஸ்குமார் தனிகை, லோகேஸ்வரன் தமிழினி ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை…

Read More

பெலாரஸ் நாட்டு எல்லையில் இலங்கையர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த  ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விடயத்தை அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்றுள்ளார். அங்கிருந்து பெலராஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ்…

Read More

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை  பெற்றெடுத்து உள்ளார். ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் சிசு பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் வைத்தியர் சமன் குமார தெரிவித்தார். அவர்களில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஹமாஸ் பிணைக் கைதிகளில் இலங்கையர்கள்!

காசா பகுதியின் வடபகுதியில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்  நிமல் பண்டார தெரிவித்துள்ளார். காசா பகுதியில் வசிக்கும் மக்களுடன் இந்த குழு எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “தற்போது, ​​அங்கு வாழும் மக்கள் குறிப்பாக காசா பகுதியின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களில் 27 இலங்கையர்கள் உள்ளதாக பலஸ்தீன அலுவலகத்தில் உள்ள எமது பலஸ்தீன பிரதிநிதி தெரிவித்துள்ளார். 27…

Read More

மயிலத்தமடு, மாதவனை விவசாயிகள் போராட்டம் ; அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவாருங்கள்

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கையக்கப்படுத்தப்பட்டுள்ள தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப்போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள முன்னரங்கப் பாதுகாவலர்கள், இவ்வாறான அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து அயர்லாந்தை தளமாகக்கொண்டியங்கிவரும் ‘முன்னரங்கப் பாதுகாவலர்கள்’ (Front Line Defenders) எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தமது கால்நடை வளர்ப்பு மேய்ச்சல்…

Read More

வடக்கு – கிழக்கில் 20 ஆம் திகதி பூரண ஹர்த்தால்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார்  மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (16) மாலை மன்னாரில்  அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு…

Read More

குடைசாய்ந்த முச்சக்கர வண்டி: ஒருவர் பலி

தெனியாய – சீத்தாஎலிய பகுதியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று(14) மாலை இந்த விபத்து இடம்பெற்றது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, சுமார் 13 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி மற்றும் மேலும் 2 பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 47 வயதான பெண்ணொருவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் தெனியாய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சடலம் குறித்த…

Read More