வருமான வரி முற்பணத்தை மீள செலுத்த திட்டம்

60 அல்லது 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளிடமிருந்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களால் வட்டி வருமானத்திலிருந்து அறவிடப்பட்ட 05 வீத வருமான வரி முற்பணத்தை மீள செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரஜைகளின் நிதி நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, வருடாந்த வருமானம் 12 இலட்சத்திற்கு மேற்படாத வரி வருமானம் மீதான முற்பண வரி அறவிடப்பட்டுள்ள அனைத்து சிரேஷ்ட பிரஜைகளும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். சிரேஷ்ட…

Read More

செப்டெம்பரில் பணவீக்கம் 0.8 சதவீதமாக வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 2.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது செப்டெம்பர் மாதம் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.  அதன்படி கடந்த ஓகஸ்ட் மாதம் 5.4 சதவீதமாகப் பதிவாயிருந்த உணவுப்பொருட்களின் விலைகள் செப்டெம்பர் மாதத்தில் 5.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளன. அதேவேளை ஓகஸ்டில் 9 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவல்லாப்பொருட்களின் விலைகள் மற்றும் கட்டணங்கள் செப்டெம்பரில் 5.9 சதவீதமாகப் பதிவாகின. பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த காலங்களில் இதற்கு முன்னர்…

Read More

இலங்கை தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயம்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைவடைந்திருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எனும் கட்டமைப்புக்குள் அரச சட்டவாதி செயற்படும் முறை மிகமுக்கியமான காரணமாகும். சட்டத்துறை சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் குற்றமொன்றை சட்டத்துக்கு அமைவாகக் கையாளல் ஆகிய இரண்டு பணிகளை சட்டமா அதிபர் முன்னெடுப்பதானது வெளிப்படையாகத் தெரியக்கூடிய முரண்பாடொன்றைத் தோற்றுவித்திருக்கின்றது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த…

Read More

அமெரிக்க தூதுவர் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும்- தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது. 2022 மே 9 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தூதுவர் கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது. இரண்டு வாரங்களிற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் குழுவின்…

Read More

7 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா : அமைச்சரவை அனுமதி

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த…

Read More

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயர் தர மாணவன் பலி

மாத்தறை – கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு தற்போது செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (22) இரவு, வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்தார். சடலம் தற்போது ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சந்தோஷ் நாராயணனின் ‘யாழ் கானம்’ நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி

யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் ‍சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ‘யாழ் கானம்’ இசை நிகழ்ச்சியின் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது குறிப்பிடப்பட்ட விடயமாவது :…

Read More

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசின் கொள்கையாகும் – ஜனாதிபதி ரணில் 

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா. பொதுச் செயலாளரின் வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மன்னார், முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி…

Read More

அடுத்த வருடத்திலிருந்து நாளாந்தம் எரிபொருள் விலைகளில் திருத்தம் – அமைச்சர்  காஞ்சன

நாட்டில் தற்போது விலை சூத்திரத்துக்கு ஏற்ப மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் எரிபொருள் விலை திருத்தங்களை, அடுத்த வருடம் முதல் நாளாந்தம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் சனிக்கிழமை (21) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான தீர்மானம் யாதெனில் மாதத்துக்கு ஒரு…

Read More

விழுந்த யானை தானாக எழுந்து செல்லும் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது – அகிலவிராஜ் காரியவசம்

யானையொன்று விழுந்தால் அதை எழுப்புவது மிகவும் கடினமாகும் என்று கிராமங்களில் கூறுவர். ஆனால் அந்த யானை தானாக எழுந்து பயணிக்க தொடங்கினால், அந்த பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. ஐ.தே.க.வும் அதனைப் போன்றதே. அதனை பலம்மிக்க பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,…

Read More