உள்ளூர்
இலங்கை வருகிறது ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக்குழு
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் என்பன குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான நடைமுறைக்காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் உரியவாறு பரிசீலிக்கப்பட்டு, ஜி.எஸ்.பி பிளஸ்…
முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களை மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்க நடவடிக்கை – மனுஷ நாணயக்கார
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் சம்பள நிர்ணய சபை சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. எனவே, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களை மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்வாங்குவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சம்பள பிரச்சினை மாத்திரமின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பெருந்தோட்டக் கம்பனிகள்…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், நீர் கட்டணத்திற்கு விரைவில் வெவ்வேறு சூத்திரங்கள்: ஜீவன் தொண்டமான்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நீர் கட்டணம் வெவ்வேறு சூத்திரங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படுமென நீர் வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நீர் கட்டணம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் இனியும் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
சந்தேகநபர்கள் உயிரிழக்கின்றமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
பொலிஸாரின் பொறுப்பில் இருக்கும் போது சந்தேகநபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் இவ்வாறான 20-இற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். அதற்கமைய, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை கையாள்வதற்கான விசேட அறிவுறுத்தல்களை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை
முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) உடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த…
சம்பந்தன் எம்.பி.பதவியை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க கோரிக்கை
இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில்…
அஸ்வெசும பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். உரிய வகையில் வங்கிக் கணக்குகளை திறக்காததன் காரணமாக 156,261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி…
“இந்திய வம்சாவளியினர்” எனப் பதிவிடலாம் : பதிவாளர் நாயகம்
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு…
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு அடுத்த வாரம் அமைச்சரவைக்கு – அமைச்சர் கஞ்சன
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை
தமது வேடிக்கைத்தனமான அதிகார அரசியலின் புதிய நாடகத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரங்கேற்றியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சரவையினுள் நடத்திய அபூர்வமான நபர்களிடையிலான மாற்றமே இந்த நாடகமாகும் என அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, எதிர்க்கட்சியும் நாட்டு மக்களும் தொடர்ந்தும் தோல்வியடைந்ததாக கூறிய சுகாதார அமைச்சரிடம் சுற்றாடல் அமைச்சை கையளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதற்கு பதிலாக ஜில்மாட் நாட்டை உருவாக்குவதே தற்போது நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர்,…

