உள்ளூர்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் கண்காணிப்பு கெமராக்கள்
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் நீர் உட்புகாதவாறு மழை நீர் தடுப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கொட்டகையும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவின் பணிப்புரைக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பகுதியில் கொக்குளாய் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணம் அதிகரிப்பு
தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தை திருத்தி வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்திற்கு அமைவாக தேசிய அடையாள அட்டையின் பிரதியை பெற்றுக்கொள்வதற்கான புதிய கட்டணம் 1000 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது. Online ஊடாக முன்வைக்கப்படும் விண்ணப்பங்களுக்கான…
போராட்டத்திற்கு தயாராகியுள்ள ஆசிரியர்கள்
ஆசிரியர் சங்கங்கள் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை நிறைவடைந்ததும் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச மற்றும் அரச…
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் மக்கள் மத்தியில் குழப்பம்
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து , அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி , எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு…
கொழும்பில் சீன வீட்டுத்திட்டம்
சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 2024 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…
திட்டமிட்ட தினத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன ஆய்வுக் கப்பல்
ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சீன ஆய்வுக் கப்பல் நேற்று (25) இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்தது. Shi Yan 6 எனும் சீனாவின் ஆய்வுக் கப்பல், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்து சமுத்திரத்தில் இருந்ததுடன், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தற்போது கொழும்பு துறைமுகத்தின் S.A.முனையத்தில் நங்கூரமிட்டுள்ளது. கடந்த மாதம் 11 ஆம் திகதி குவென்ஷோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சீன…
நிர்ணய விலைக்கு அதிகமாக விற்கப்பட்டால் அரிசி இறக்குமதிக்கு நடவடிக்கை – வர்த்தக அமைச்சர்
நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(25) அமைச்சரவை உபகுழு கூடிய போது, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சம்பா உள்ளிட்ட பல அரிசி வகைகள் இவ்வாறு நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சம்பா அரிசி 230 ரூபாவிற்கும் நாட்டரிசி 220 ரூபாவிற்கும் கீரி சம்பா…
புலம்பெயர் வளங்கள் நிலையத்தை அமைப்பதற்கு நியூசிலாந்திடமிருந்து நிதியுதவி
புலம்பெயர்வோருக்கும் மீளவும் எமது நாட்டுக்கு வருகை தருகின்ற புலம்பெயர்ந்தோருக்கும் மற்றும் புலம்பெயர்வதற்கு எதிர்பார்க்கின்றவர்களுக்கும் வெளிநாடுகளில் பயணிக்கும் போது, தொழில் புரியும் போது மற்றும் வசிக்கும் போது எதிர்கொள்ள நேரிடுகின்ற இடர்கள் மற்றும் சவால்களைக் குறைத்துக் கொள்வதற்கு புரிதலுடன் தீர்மானமெடுப்பதற்கு இயலுமை வழங்குவதற்காக, போதியளவான, காலத்தோடு தழுவியதாகவும் மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் புலம்பெயர் வளங்கள் நிலையத்தை நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூசிலாந்து அரசு தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளது. அதற்கமைய,…
கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் யோசனையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா முன்வைத்த யோசனையை லசார்ட் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றை அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் ஏனைய கடன் உரிமையாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில்…
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்தால் அந்நிய செலாவணி வருமானம் வீழ்ச்சியடையும் – அமைச்சர் மனுஷ
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்களால் மாதாந்தம் 500 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்து, மத்திய கிழக்கில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டால் அங்குள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில்களை இழக்க வேண்டியேற்படும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அந்நிய செலாவணி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்…

