உள்ளூர்
எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். “இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக…
இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (01) காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலத்தை பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை,…
மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம் மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஊவா மாகாணத்தில் இன்று காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்…
நாம் 200 தேசிய நிகழ்வு இன்று
மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை கொழும்பில் ‘நாம் 200’ எனும் தொனிப்பொருளில் தேசிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்திய வம்சாவளியான மலையக மக்களுக்கு 200 ஆண்டுகள் கடந்தும் கிடைக்கப் பெறாமலுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் இலங்கைக்கு மாத்திரமின்றி சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள்,…
வட, கிழக்கில் இந்து, முஸ்லிம் வணக்கத்தலங்களை அபகரிப்பதற்கு வசதி ஏற்படுத்துகிறது தொல்பொருள் திணைக்களம் – சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு
தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்துகின்றது என சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள ‘ஒடுக்குமுறை’ கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்…
பாதாள உலகச் செயற்பாடுகளை ஒழிக்க புதிய திட்டம்
எதிர்வரும் 06 மாதங்களில் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி பாதாள உலகச் செயற்பாடுகளை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கைதி ஒருவர் தெரிவித்தது போன்று மீண்டும் கொழும்பில் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என விசாரணையில் ஏற்கனவே தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்…
இன்று ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்
நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. “ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இது தொடர்பான ஆய்வுகளை இன்றும் நாளையும் (31) மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்கு அமைய கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்குக் கடலின் நீர் மாதிரிகள்…
ஒரு கோடி பெறுமதியான களைக்கொல்லிகள் மீட்பு
கற்பிட்டி கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என்பன நேற்று (29) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கற்பிட்டி விஜய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் விசேட படகுப்பிரிவைச் சேர்ந்த கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடைய இரண்டு…
நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று பகல் 12.00 மணிக்கு மதிய உணவு…
காசாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ள 17 இலங்கையர்கள்
இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முழுமையான போர் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தொடர்ந்து காசா பள்ளத்தாக்கில் சிக்குண்டுள்ளனர். இலங்கையர்கள் தற்போது தென்காசாவில் தஞ்சமடைந்துள்ளனர்,ஆனால் எகிப்திற்கு செல்லும் ரபா எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்களை வெளியேற்ற முடியாத நிலையில் இலங்கை அதிகாரிகள் உள்ளனர். எகிப்திற்கு செல்வதற்கு இதுவே ஒரே வழி மேலும் இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரேவழியாக இது காணப்படுகின்றது. மூன்று குடும்பங்களை சேர்ந்த…

