நிறைவுக்கு வந்தது அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் கடந்த 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று (09) நள்ளிரவுடன் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதுடன், இன்று முதல் வழமை போன்று கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. பணிப்பகிஷ்கரிப்பின்…

Read More

ரொஷான் ரணசிங்கவின் கருத்து தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனை

இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான இடைக்கால குழு விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.  அதுமாத்திரமன்றி பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றக்கட்டமைப்பின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது: இலங்கை கிரிக்கெட் சபை குறித்த இடைக்கால…

Read More

95 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைமையில் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளன. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகும் நிலைமை தற்போது…

Read More

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு நிர்ணய விலை – உணவு பாதுகாப்பு அமைச்சர்

வரி அதிகரிப்புக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீனியை விற்பனை செய்வதற்கு 275 ரூபா அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்காக இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். பருவ காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டால், அதனை இறக்குமதி செய்யும் காலமும் நீடிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டால் அதற்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக…

Read More

கொழும்புத் துறைமுக உட்கட்டமைப்பிற்கு அரை பில்லியன் டொலர்கள் – உறுதியளிக்கும் DFC

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு உதவுவதற்காக அரை பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையினை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) இன்று அறிவித்தது. தனது பங்காளரின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்யும், உள்ளூர் சமூகங்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் மற்றும் உள்ளூர் நிதி நிலைமைகளுக்கு மதிப்பளிக்கும் உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியளிப்பை…

Read More

கிரிக்கெட்டை கட்டியெழுப்ப திறைமையானவர்களோடு நேர்மையாக ஒன்றிணைவோம் – எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் இணைந்த கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய ஊழல், திறமையற்ற மற்றும் ஒழுங்கற்ற நிர்வாகம் முடிவுக்கு வந்து சாதகமான மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும், நாட்டிற்கும் விளையாட்டுக்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் மாற்றத்தை உகந்ததாகவும் அறிவார்ந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.   கிரிக்கெட்டின் அடிமட்டமான பாடசாலைகள், சங்கங்கள், மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களின் வசதி வாய்ப்புகளுக்காக கிரிக்கெட்டிற்குச் சொந்தமான பெரும் தொகையான நிதி முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும், இதற்காக, முதல் வரிசை…

Read More

வற்வரி திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவிப்பு

சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம்   தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட   மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே  இந்த விடயத்தை  அவர் சபைக்கு அறிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம்   தொடர்பில் உயர்…

Read More

தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவோ விநியோகமோ இடம்பெறவில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

தரம் குறைந்த எரிபொருள் கொள்வனவோ விநியோகமோ நாட்டில் இடம் பெறவில்லை. அது தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் குறைந்த எரிபொருள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றச்சாட்டுக்களை…

Read More

இளம் தாய் தற்கொலை

பாலாவி – ரத்மல்யாய , முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் நேற்று (01) ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார். முஹம்மது ஹனீபா பாத்திமா நிபாஸா (வயது 34) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார் என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். நேற்றிரவு 1.30 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வீட்டில் கணவனும், மூன்று பிள்ளைகளும் தூங்கிய பின்னர் குறித்த இளம் பெண் விட்டுக்குள்…

Read More

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள விசேட அனுமதி

காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். “இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள…

Read More