உள்ளூர்
வரவு செலவு திட்டம் 2024 – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (14) முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு விவாதம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 22 முதல்…
ஒக்டோபரில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் மூலம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஒக்டோபர் மாதத்தில் 517.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இவ்வாண்டு ஒக்டோபர் வரையான…
வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்கூற மறுத்த மஹிந்த
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலார்கள் கருத்துக் கேட்டபோதே உடனடியாக எப்படிக் கருத்துக்கூறுவது எனக்கூறி மறுத்து விட்டார். இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, ” நான் வரவு – செலவுத்திட்ட…
காணி உரிமை கோரும் மயிலத்தமடு பாற்பண்ணையாளர்களுக்கு சிறு வெற்றி
கிழக்கு மாகாணத்தில் கறவை மாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடும் 13 சிங்கள மக்களை காணியை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியாட்கள் சிலர் தாற்காலிக வீடுகளை அமைத்து விவசாயம் செய்து வருவதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வருடம் செப்டெம்பர் 22ஆம் திகதி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 13ஆம் திகதி அறிவித்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவணை ஆகிய பிரதேசங்களில் புல்வெளிகளை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள…
சீனாவிடமிருந்து பொலிஸ் திணைக்களத்துக்குமோட்டார் சைக்கிள்கள், கணனிகள் நன்கொடை
சீனாவினால் பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க…
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேசத் துரோகிகள் : நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர் என்கிறார் சஜித்
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல கிரிக்கட்டை பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பு மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்….
நாளை கூடுகிறது சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவானது நாளை திங்கட்கிழமை (13) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பில் சிறப்புரிமைகளை பயன்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும் இந்த விடயம் சம்பந்தமாக நிறைவேற்றுக்குழுவில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்படவுள்ளதோடு, உறுப்பினர்கள் சிறப்புரிமைகளை பயன்படுத்தும் அதேநேரம், நீதித்துறையின் சுயாதீனத்தினை பாதுகாப்பு தொடர்பிலும் எவ்விமாக விடயங்களை கையாள முடியும் என்பது தொடபிலான ஒரு மூலோபாயத்தைக் கண்டறிவது…
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களுக்கான ஆட்சேபனைக்காலம் நிறைவு !
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இழப்பீட்டுக் கோரிக்கை மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்துள்ளது. முன்னதாக, இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம், கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரையில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமையாளர்கள் தமது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வழங்கியதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன் பின்னர், அக் கப்பலின் உரிமையாளர்கள் தாக்கல் செய்திருந்த ஆட்சேபனைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மேலதிக…
எனக்கு உயிர் அச்சுறுத்தல் : இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தத்திற்கு எதிராக ஐ.சி.சி.யில் மேன்முறையிடுவேன் – விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையில் மேன்முறையீடு செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று தண்ணீர் கூட அருந்த மாட்டேன். காரணம் அதில் நஞ்சையும் கலக்கக் கூடும். அந்தளவுக்கு எனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவரின் கோரிக்கைக்கு அமையவே சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளதாக…
ஜனநாயகத்திற்கு மரண அடி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்திற்கான மரண அடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த…

